ஆந்திராவில் ஸ்டிரைக் வாபஸ்: பலே நாயுடு
ஹைதராபாத்:
லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி தனது மாநிலத்தில் மட்டும் லாரிகள் வேலை நிறுத்தத்தைவாபஸ் பெறச் செய்துள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
நாயுடு என்ற தனிப்பட்ட மனிதருக்குக் கிடைத்த வெற்றியாகவே இது கருதப்படுகிறது. ஸ்டிரைக்கைவாபஸ் பெற வைக்க முடியாமல் மத்திய அரசு திணறி வரும் நிலையில் நாயுடு அதைச் செய்துகாட்டியுள்ளார்.
இதன்மூலம், தமிழகம் உள்பட பிற மாநிலங்களை ஆளும் வெட்டி அரசியல்வாதிகள் வர்க்கத்தைச்சேர்ந்தவன் இல்லை நான் என்பதை பொட்டில் அடித்தார்போல எடுத்துக் காட்டியுள்ளார் நாயுடு.
மாநில அதிகாரத்திற்கு உள்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக லாரி உரிமையாளர்களுக்குநாயுடு உறுதி அளித்துள்ளார்.
மேலும் அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சு நடத்துவதாகவும் அவர்உறுதி அளித்துள்ளார். விரைவில் லாரி உரிமையாளர்களுடன் பிரதமர் வாஜ்பாய் பேச்சு நடத்துவார்என்றும் நாயுடு கூறியுள்ளார்.
இதைத் தவிர லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று வாஜ்பாய்க்கு நாயுடு அவசர தந்தி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து ஆந்திராவில் உள்ள லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ்பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுவரை லாரி ஸ்டிரைக் குறித்து எந்த உருப்படியானநடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்டிரைக்கை வாபஸ் பெறச் செய்யுமாறு வாஜ்பாய்க்கு ஒருலெட்டர் போட்டதோடு சரி.
மற்றபடி தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல பட்டும்படாமல் இருந்துவருகிறார்.
காய்கறிகள் வாங்கவோ, அரிசி வாங்கவோ திராணி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தமிழர்களின் வயிறுகளின் அலறல் ஜெயலலிதாவின் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications