வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையினர் நடத்திய "எமகண்ட பூஜை"
கோயம்புத்தூர்:
சந்தன வீரப்பனைப் பிடிக்க முடியாத அதிரடிப்படை போலீசார் தற்போது ஜோசியத்தை நாடஆரம்பித்துள்ளனர். ஒரு ஜோசியர் கூறியதைக் கேட்டு வீரப்பன் காட்டுப் பகுதியில் நடு இரவில்எமகண்ட பூஜையை நடத்தியுள்ளனர் அதிரடிப்படையினர்.
கடந்த சுமார் 14 ஆண்டுகளாக வீரப்பனைத் தேடி வரும் அதிரடிப்படையினரின் கைகளில் அவன்சிக்கவே இல்லை. அதற்குள் எத்தனையோ கடத்தல்கள், கொலைகள் எல்லாம் நடந்து விட்டன.
முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் முதல் காளிமுத்து வரை "வீரப்பனை எப்படியும் பிடித்தே தீருவோம்"என்று சூளுரைத்து விட்டு, காட்டுக்குள் சென்று பின்னர் வெறுங்கையுடன் திரும்பியதுதான் மிச்சம்.
தற்போதும் சுமார் 600 அதிரடிப்படை வீரர்கள் வீரப்பனைத் தேடும் பணியில் தீவிரமாகஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குச் சில போலீஸ் உளவாளிகளும் அவ்வப்போது தகவல்களைத் தந்துகொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் தரும் தகவல் மட்டும் அதிரடிப்படையினருக்குப் போதவில்லை. இதையடுத்துதற்போது ஜோசியர்கள், மந்திரவாதிகள் மற்றும் குறி சொல்பவர்களை அதிரடிப்படையினர் நாடஆரம்பித்துள்ளனர்.
சமீபத்தில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பிரபல ஜோசியரிடம் "வீரப்பன் எப்போதுதான்பிடிபடுவான் என்று சொல்லுங்கள்" என்று ஆரூடம் கேட்டுள்ளனர்.
உடனே அந்த ஜோசியரும், ஜூன் மாதத்தில் அவன் நிச்சயம் பிடிபடுவான் என்று கூறியதோடு,வீரப்பனைப் பிடிக்க வேண்டுமென்றால் நடு இரவில் எமகண்ட பூஜை நடத்த வேண்டும் என்றும்கூறியுள்ளார்.
இதையடுத்து கர்கேகண்டி மலைப் பகுதியில் உள்ள காட்டில் நள்ளிரவு எமகண்ட பூஜையைவெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் அதிரடிப்படையினர். அதிரடிப்படையின் மிக முக்கியமானஅதிகாரிகள் மட்டுமே இந்தப் பூஜையில் கலந்து கொண்டனர்.
வீரப்பன் விரைவில் பிடிபட வேண்டுமென்று அந்தப் பூஜையின்போது அதிகாரிகள் வேண்டிக்கொண்டனர்.
ஜோசியரோடு நின்று விடாமல் "வெற்றிலையில் மை போட்டு குறி" சொல்லும் பெண் ஒருவரிடமும்வீரப்பனின் இருப்பிடம் குறித்து அதிரடிப்படையினர் விசாரித்துள்ளனர்.
சத்தியமங்கலத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் மலைக்குக் கீழ் உள்ள பாறைக் குகையில் வீரப்பன்இருக்கிறான் என்றும், கர்கேகண்டிக்கு மேற்கே 11 கி.மீ. தூரத்தில் பதுங்கியுள்ளான் என்றும் அந்தக்குறி சொல்லும் பெண் கூறியுள்ளார்.
ஆனால் அந்த இடங்களில் தேடிப் பார்த்த அதிரடிப்படையினருக்குக் கிடைத்தது தோல்வி மட்டுமே.
அதிகாரிகளின் இந்தத் தேவையில்லாத முயற்சிகளைக் கண்டு மற்ற அதிரடிப்படை வீரர்கள் மிகவும்நொந்து போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications