இட ஒதுக்கீடு தரும் உரிமை மாநில அரசுக்கு வேண்டும்: தமிழகம்
சென்னை:
கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடுசெய்வது என்பதை முடிவு செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கு தரப்பட வேண்டும் என தமிழகம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இப்போது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடுவழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு போதாது என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்படோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் ஆகியோரின்சதவீதம் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு அளவில் உள்ளது. இதனால் இட ஒதுக்கீட்டின் அளவை முடிவு செய்யும்உரிமையை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்பாப்பா சுந்தரம் கூறினார்.
சட்டமன்றத்தில் பேசிய அவர்,
மாநிலத்துக்கு மாநிலம் சமூகப் பின்னணியும், வரலாற்றுத் தேவைகளும் மாறுபடுகின்றன. இதனால் காலம் காலமாகசமூகரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தர அந்தந்த மாநிலத்துக்கே உரிமை தர வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசுப் பணிகளில்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இப்போது 27 சதவீத இட ஒதுக்கீடு தான் தரப்படுகிறது. இதை 50 சதவீதமாக உயர்த்தவேண்டும்.
மத்திய அரசின் நிர்வாகப் பணிகளிலும் இந்த ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும். 1994ம் ஆண்டில்பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை தமிழக அரசுகொண்டு வந்தது. அதை அரசியல் சட்டத்தின் 9வது பிரிவிலும் சேர்க்க வைத்தோம்.
ஆனால், இந்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் பலரும் வழக்குகள் தொடர்ந்தனர். அவை இன்னும்நிலுவையில் உள்ளன.
இட ஒதுக்கீட்டிலும் சமூக ஏற்றத் தாழ்வைப் போக்குவதிலும் தமிழகம் தான் முன்னோடியாக இருந்து வந்துள்ளது.ஆனால், மண்டல் கமிஷன் பரிந்துரை வழக்கில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், 1994ம் ஆண்டில் 69 இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற தமிழக அரசு புதிய சட்டத்தையே இயற்றியதுஎன்றார் அமைச்சர் பாப்பா சுந்தரம்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications