நான் தான் பாக்தாத் கவர்னர்: புஷ்சுக்கு புதிய தலைவலி
தொஹா:
அமெரிக்காவின் கடும் எதிர்பையும் மீறி பாக்தாதின் கவர்னராக முகம்மத் மொஷின் சுபைதி என்பவர் தன்னைத்தானே நியமித்துக் கொண்டுள்ளார். தன்னை மக்கள் தேர்வு செய்துள்ளதாகவும் அமெரிக்காவின் உத்தரவுகளைதான் மதிக்கப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஆனால், சுபைதியை கவர்னராக அங்கீகரிக்க மாட்டோம் என அமெரிக்காவின் சார்பில் ஈராக்கின் புதியநிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெ கார்னர் கூறியுள்ளார். முன்னாள் அமெரிக்க ராணுவ ஜெனரலான இவர்தலைமையில் தான் ஈராக்கில் புதிய நிர்வாகத்தை அமெரிக்கா நியமிக்க உள்ளது.
இதற்காக நேற்று தான் ஜெ கார்னர் முதல்முறையாக ஈராக்குக்குள் வந்தார். இதுவரை தோஹாவில் இருந்தவண்ணம்ஈராக்கிய விவகாரங்களை அவர் கவனித்து வந்தார்.
பாக்தாதில் நிருபர்களிடம் பேசிய அவர், இங்கே பலர் தங்களைத் தாங்களே தலைவர்களாக நியமித்துக்கொண்டுள்ளனர். அவர்கள் எல்லாம் அட்ரஸே இல்லாத ஆட்கள். இங்கு ஈராக்கிய மக்களின் அரசைஅமைப்போம். அதற்காகத் தான் நான் இங்கு வந்துள்ளேன்.
சுபைதியை நாங்கள் கவர்னராக நியமிக்கவில்லை. அவரை அங்கீகரிக்கவும் மாட்டோம் என்றார்.
நான் தான் கவர்னர்:
இந் நிலையில் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு முகம்மத் மொஷின் சுபைதி அளித்த பேட்டியில், நான் தான் இனிபாக்தாத் விவகாரங்களை கவனிப்பேன். மக்கள் சார்பில் நான் ஆட்சியாளராகியுள்ளேன். எந்த அன்னிய நாடும்என்னை அங்கீகரிக்க வேண்டிய அவசியமே இல்லை. மக்கள் அங்கீகரித்தால் போதும்.
நான் அரசாங்கத்தை நடத்தவில்லை. மக்கள் தேவைகளை நிறைவேற்றும் ஒரு நிர்வாகத்தின் தலைவன். அவ்வளவுதான்.
ஈராக்கிய மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யலாம் என ஜார்ஜ் புஷ் பலமுறை வாய் கிழியப் பேசினார்.இப்போது என்னை மக்கள் தேர்வு செய்துள்ளனர். ஆக, ஒரு வகையிவ் பார்த்தால் அமெரிக்கா தான் என்னைத்தேர்வு செய்துள்ளது.
எனது நாட்டு பழங்குடி மக்களும் மதத் தலைவர்களும் சேர்ந்து என்னைத் தேர்வு செய்துள்ளனர். இதுஅமெரிக்காவுக்குத் தெரியும் என்றார்.
பெட்ரோலியத்தை ஒதுக்க...
இந் நிலையில் ஈராக்கிய நிர்வாகியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ கார்னர் முதல் கட்டமாக ஈராக்கியபெட்ரோலியத்தை தோண்டி எடுப்பது, அதை விற்பது போன்ற காண்ட்ராக்ட்களை அமெரிக்க நிறுவனங்களுக்குவழங்கும் பணிகளில் முதலில் ஈடுபடுவார். அதன் பின்னர் அமெரிக்க ஆதரவு கூலிகளைக் கொண்ட ஒரு அரசைஈராக்கில் அவர் நியமிப்பார்.
கூலிகள் கிடைக்கும் வரை அந் நாட்டை ஜெ கார்னரைக் கொண்டே நிர்வகிக்க புஷ் திட்டமிட்டுள்ளார்.
சதாமின் ஆலோசகர் கைது:
இதற்கிடையே சதாமின் ஆட்சியில் முக்கிய பங்கு வகித்த முகம்மத் ஹஸ்மாக் அல் சுபைதி என்பவர் அமெரிக்கப்படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவின் 55 பேர் கொண்ட தேடப்படுவோர் பட்டியலில் 18வது இடத்தில் இருந்தார். ஷியாமுஸ்லீம்களை அடக்குவதில் இவர் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்கா கூறுகிறது.
பேரழிவு ஆயுதங்கள் எங்கே?
இதற்கிடையே ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் ஏதும் கிடைக்காமல் போனதால் அமெரிக்கா மீது உலக நாடுகளின்குற்றச்சாட்டு தீவிரமடைந்துள்ளது.
பேரழிவு ஆயுதம் வைத்திருப்பதாகக் கூறி ஈராக்கைத் தாக்கிய அமெரிக்கா இதுவரை அந் நாட்டில் ஒருஆயுதத்தைக் கூடக் கைப்பற்ற முடியாமல் திணறுவது அந் நாடு பொய் சொல்லியதையே எடுத்துக் காட்டுவதாகரஷ்யா கூறியுள்ளது.
இதையடுத்து இந்த ஆயுதங்களைத் தேடுவதற்கென 1,000 பேர் தனிப் படையை ஈராக்குக்கு அனுப்பப் போவதாகஅமெரிக்கா கூறியுள்ளது.
இந் நிலையில் ஈராக்கில் உடனடியாக ஐ.நா. ஆயுதப் பார்வையாளர்கள் மீண்டும் தங்கள் ஆய்வுப் பணியைத்தொடங்க அனுமதிக்க வேண்டும் என இக் குழுவின் தலைவர் ஹேன்ஸ் பிலிக்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications