காஷ்மீர்: 18 பாக். தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ராணுவத்தினருடன் நடந்த இரு வேறு துப்பாக்கிச் சண்டைகளில் 18 பாகிஸ்தான்தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹில் கக்கா காட்டுக்குள் இன்று காலை ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான்தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து ராணுவத்தினர்மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போதுதான் இந்தத் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. அப்போதுராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் சில கிரனைட் குண்டுகளையும் வீசி எறிந்துள்ளனர்.
பல மணி நேரம் வரை நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில் 14 பாகிஸ்தான் தீவிரவாதிகளைராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். ஒரு ராணுவ வீரர் குண்டுக் காயம் அடைந்தார். அவர்உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து 4 ஏ.கே. ரக துப்பாக்கிகளும், துப்பாக்கிக் குண்டுகளும்,கிரனைட் குண்டுகளும், வயர்லெஸ் கருவிகளும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அதேபோல் ரஜெளரி பகுதியில் நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் 4லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
குண்டு வெடிப்பில் 6 பேர் பலி:
இதற்கிடையே காஷ்மீரில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர்கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள குல்ஷான்போரா என்ற இடத்தில் சக்தி வாய்ந்த ஒரு குண்டைதீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இன்று காலை 8 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.
இந்தக் குண்டு வெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 2 பேர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
மேலும் 11 பேர் இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர். இவர்களில் சிலர் நிலை கவலைக்கிடமாகஉள்ளது.
இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் இந்தக் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்கவில்லை.சம்பவம் நடந்த இடத்தைப் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் முற்றுகையிட்டுள்ளனர்.குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதிகளை அவர்கள் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications