புனே பெண் சார்ஸ் நோயாளிக்கு திருமணம்
புனே:
புனேயில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், டாக்டர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ்திருமணம் செய்து கொண்டார்.
இந்தோனேஷியாவிலிருந்து கடந்த 8ம் தேதி விமலா, அவருடைய மகன் ஸ்டான்லி டிசில்வா மற்றும்மகள் ஜூலி ஆகியோர் இந்தியா வந்தனர். இதில் ஜூலிக்கு இந்தியாவல் திருமணம்நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ஜகார்தாவில் இருந்து இவர்கள் வந்த விமானத்தில் ஒரு பயணிக்கு சார்ஸ் நோய் இருப்பதுதெரியவந்தது. இதையடுத்து அந்த விமானம் சிங்கப்பூரில் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிதரையிறக்கப்பட்டார். மற்றவர்கள் தொடர்ந்து இந்தியாவுக்குப் பயணம் செய்யஅனுமதிக்கப்பட்டனர்.
மும்பை வழியாக புனே வந்து சேர்ந்த நிலையில் கடந்த 17ம் தேதி ஸ்டான்லிக்கு உடல் நலம்பாதிக்கப்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சார்ஸ் நோய்இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஜூலிமற்றும் விமலாவுக்கும் சார்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது.
தற்போது இந்த மூன்று பேருமே புனேயில் உள்ள சித்தார்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். இவர்களில் ஸ்டான்லி முழுமையாகக் குணமாகி விட்டார். மற்ற இருவருக்கும் தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சைலேஷ் சூர்யவன்ஷிஎன்பவருக்கும் ஜூலிக்கும் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. இப்போதைய நிலையில்திருமணம் வேண்டாமே என்று டாக்டர்கள் தடுத்துப் பார்த்தனர். சில நாட்கள் கழித்து திருமணம்செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர்.
ஆனால் ஜூலியும் சைலேசும் திருமணத்தைத் தள்ளிப் போட விரும்பவில்லை. இதையடுத்துடாக்டர்கள் முன்னிலையிலேயே ஜூலியும் சூர்யவன்ஷியும் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
புனேயில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக இந்தத் திருமணம் வேறு ஒரு பெரிய சர்ச்சில் நடப்பதாக இருந்தது. ஆனால் சார்ஸ் நோய்காரணமாக மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஒரு சர்ச்சில் எளிய முறையில் இருவரும் திருமணம்செய்து கொண்டனர். மோதிரம் மட்டுமே மாற்றிக் கொண்டு பத்தே நிமிடங்களில் இந்தத் திருமணம்நடந்து முடிந்தது.
திருமணத்தில் டாக்டர்களும் பங்கேற்றனர்.
திருமணம் முடிந்தவுடன் ஜூலியும் இந்தியாவில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் 12 பேரும்மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சைஅளிக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை டெக்னீசியன்களுக்காக டெல்லியில் இருந்து300 மாஸ்குகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.
டாக்சி டிரைவர் எங்கே?:
இதற்கிடையே விமலா, ஜூலி மற்றும் ஸ்டான்லி ஆகிய மூவரையும் ஆம்பர்நாத்திலிருந்துபுனேக்குக் கூட்டிக் கொண்டு வந்த டாக்சி டிரைவர் தற்போது தேடப்பட்டு வருகிறார்.
இவர்கள் மூவருக்கும் சார்ஸ் நோய் தாக்கியுள்ள நிலையில் அந்த டிரைவரும் நிச்சயம் இந்நோயால்பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த டாக்சி டிரைவரைத் தேடி வருகின்றனர்.
குணமடையும் வாலிபர்:
இதற்கிடையே நேற்று புனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சார்ஸ் நோயாளிக்கும் டாக்டர்கள்தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் வேகமாகக் குணமடைந்து வருகிறார்.
கிரிஷ் கஜவானி என்ற அந்த 23 வயது வாலிபர் கடந்த 18ம் தேதி அமெரிக்காவிலிருந்துதிரும்பினார். அவருடைய ரத்தம், சளி, சிறுநீர் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில்பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
குஜராத் துறைமுகத்தில்...
இதற்கிடையே குஜராத் துறைமுகத்தில் சார்ஸ் நோய்க்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்தில் உள்ள காண்ட்லா துறைமுகத்திற்கு வந்து சேரும் கப்பல் பயணிகள் அனைவரும்தீவிரமாகப் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
இந்தத் துறைமுகத்திற்கு தினமும் 5 முதல் 6 கப்பல்கள் வந்து செல்கின்றன. இவற்றில் ஒன்றாவதுசார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications