கோவை சிறையில் வெடிகுண்டு வழக்கு கைதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கை விரைந்து நடத்தக் கோரி மத்திய சிறையில் 5 கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு தொடர்குண்டு வெடிப்புகள் நடந்தது. இதுதொடர்பாக அல்-உம்மா கும்பல் உள்படநூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில், விசாரணையை விரைவாக நடத்தக் கோரி 5 கைதிகள் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஒருநாள் முழுவதும் இந்தஉண்ணாவிரதம் நீடித்தது. இதையடுத்து அவர்களை சிறை நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தினர். அதன் பின்னரே போராட்டத்தை அவர்கள்கைவிட்டனர்.
-->












Click it and Unblock the Notifications