தமிழக ஆளுநரை டெல்லிக்கு அழைத்தார் வாஜ்பாய்
டெல்லி:
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்தும், எதிர்க் கட்சிகள் நடத்தப்படும் விதம் குறித்தும், பொடா சட்ட துஷ்பிரயோகம் தொடர்பாகவும்ஆளுநர் ராம்மோகன் ராவிடம் பிரதமர் வாஜ்பாய் நேரில் விசாரித்தார்.
இரு தினங்களுக்கு முன் திமுக, மதிமுக, பா.ம.க. எம்.பிக்கள் டி.ஆர். பாலு தலைமையில் பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்தனர். அதில்தமிழகத்தில் அரசு ஊழியர்களில் இருந்து எதிர்க் கட்சியினர் வரை, போராட்டம் நடத்தும் மாணவிகளில் இருந்து பத்திரிக்கையாளர்கள்வரை அனைவரும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.
அங்கு ஜனநாயகத்துக்கே இடமில்லாமல் போய்விட்டது. உடனே மத்திய அரசு இதில் தலையிடாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகும்என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து ஆளுநர் ராம்மோகன் ராவை வாஜ்பாய்க்கு டெல்லி வருமாறு அழைத்தார். அவர் நேற்று டெல்லி சென்று ஜனாதிபதிஅப்துல்கலாமைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து பிரதமர் வாஜ்பாயை நேற்றரவு சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைமை, சட்டம் ஒழுங்கு, மாநில அரசு மீதான மக்கள் மனநிலை குறித்து பிரதமர் விளக்கம்கேட்டதாகத் தெரிகிறது.
மேலும் தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து அறிக்கை தருமாறும் வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னை திரும்பியதும் இந்தஅறிக்கையை ராம்மோகன் ராவ் அனுப்ப உள்ளார்.
மேலும் வீரப்பன் விவகாரத்தில் ரஜினியையோ அல்லது கருணாநிதியையோ கைது செய்வது போன்ற செயல்களை தான் விரும்பவில்லைஎன்பதை ஜெயலலிதாவிடம் எடுத்துச் சொல்லுமாறும் வாஜ்பாய் கூறியதாகத் தெரிகிறது.
இந் நிலையில் தமிழக சட்டம் ஒழங்கு, பொடா சட்ட பயன்பாடு குறித்து மாநில தலைமைச் செயலாளரிடமும் விளக்கம் கேட்க மத்தியஉள்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். துணை பிரதமர் அத்வானியின் வசம் இந்தத் துறை உள்ளது.
பிரதமரின் உத்தரவையடுத்து தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறைச் செயலாளர் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகக்கூறப்படுகிறது.
தமிழக அரசின் மீது வாஜ்பாய் கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் தான் ராணி மேரிக் கல்லூரியைக் காக்க கடற்கரைப்பகுதி சூழல் சட்டத்தையே திருத்த அனுமதி கேட்ட சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு பிரதமர் உடனடியாக அனுமதிஅளித்ததாகக் கூறப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications