இலவச மின்சாரம் ரத்து: தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம்
சென்னை:
இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
கடந்த 13 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை தமிழக அரசு சமீபத்தில்திடீரென ரத்து செய்தது. மேலும் மின்சாரக் கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தியது.
இவற்றைக் கண்டித்து தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி இன்றுவிவசாயிகள் சங்கத்தினரும் எதிர்க் கட்சியினரும் சேர்ந்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் எதிர்க் கட்சித்தொண்டர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
திமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் கறுப்புச்சட்டைகள் அல்லது கறுப்பு பேட்ஜ்கள் அணிந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதுரையில்...
மதுரையில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கறுப்புக் கொடியை அசைத்து வைத்துபோராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
"இது ஆரம்பக் கட்டப் போராட்டம்தான். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் நீதிகிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர்வோம்" என்று இளங்கோவன் கூறினார்.
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பி. ராமலிங்கம் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அவர்கறுப்புச் சட்டை அணிந்து போராட்டத்திற்கு வந்திருந்தார்.
"எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால் வரும் மே 5ம் தேதி திருச்சியில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து அறிவிப்போம். விவசாயிகள் இப்போது போலவே எப்போதும் ஒற்றுமையுடன் இருந்து போராடவேண்டும்" என்றார் ராமலிங்கம்.
திருச்சியில்...
அதேபோல் திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் கறுப்புக் கொடி போராட்டம்நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் எதிர்க் கட்சித் தொண்டர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கிபேரணியாகச் சென்றனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாகத் திரண்டு நின்று தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களைஎழுப்பினார்கள். இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வை எதிர்த்தும்கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதற்கிடையே கோயம்புத்தூரில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலும்,திருவள்ளூரில் திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலும், தஞ்சாவூரில திமுக முன்னாள்அமைச்சர் கோ.சி. மணி தலைமையிலும் கறுப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
இவற்றைத் தவிர சேலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும்இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஊட்டியில் எதிர்க் கட்சியினர் சுமார் ஒரு மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர். திமுக, காங்கிரஸ்தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications