"நக்கீரன்" கோபாலை போலீஸ் காவலில் வைக்க பொடா நீதிமன்றம் அனுமதி
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள "நக்கீரன்" பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலை போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க பொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல். ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது, தனித் தமிழ்நாடு அமைக்க முயற்சித்தது, போலீஸ் உளவாளிகொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்த 11ம் தேதி இரவு கோபால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கடந்த 15ம் தேதி அவர் மீதான வழக்குகள் அனைத்தும் பொடா வழக்குகளாக மாற்றப்பட்டன. நேற்றுமுன்தினம் அவர் முதல் முறையாக சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, கோபாலை போலீஸ் காவலில் வைப்பதற்கு அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிபதியிடம்கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீஸ் காவலில் வைத்தால் போலீசார் சித்திரவதை செய்து தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நீதிபதியிடம் கோபால் கூறினார்.
இதையடுத்து கோபாலின் வேண்டுகோளை எழுத்துப் பூர்வமாக நீதிபதி வாங்கிக் கொண்டார். சி.பி.சி.ஐ.டி.போலீசாரும் கோபாலை போலீஸ் காவலில் வைக்க அனுமதி கோரி நீதிபதியிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் கோபால் 2வது முறையாக நேற்று பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோபால்சார்பில் அவருடைய வக்கீல் அசோகன் வாதாடுகையில்,
கோபால் மீது தொடரப்பட்டுள்ள பொய்யான வழக்குகள் தொடர்பாக அவரைப் போலீஸ் காவலில் அனுப்பத்தேவையில்லை. அவ்வாறு அனுப்பினால் அவரை சித்திரவதை செய்து மேலும் பலு பொய் வழக்குகளை போலீசார்தொடரக் கூடிய சூழ்நிலை உள்ளது.
எனவே கோபாலை போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கக் கூடாது என்று வாதாடினார் அசோகன். பின்னர் நீதிபதிராஜேந்திரன் கூறுகையில்,
பொய்யான வழக்குகள் என்று எப்படி நீங்கள் கூறலாம்? இப்போது வழக்கு பற்றி பேச வேண்டாம். கோபாலைபோலீஸ் காவலில் அனுப்புவது பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.
சட்டப் பிரிவு 167ன் படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உரிமை உள்ளது.
எனவே அவரை ஒரு வார காலத்திற்கு போலீஸ் காவலில் வைக்க அனுமதி அளிக்கிறேன். அதாவது 22ம் தேதி(நேற்று) மாலை 5.45 மணி முதல் 29ம் தேதி மாலை 5.45 மணி வரை கோபாலை போலீஸ் காவலில்வைத்திருக்கலாம்.
29ம் தேதி மாலை 5.45 மணிக்கு கோபால் இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
கூடுதல் டி.ஜி.பியின் மேற்பார்வையில் சி.பி.சி.ஐ.டியின் எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் இணைந்து விசாரிக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் கோபால் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவேண்டும்.
தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கோபால் கூறியுள்ளதால் அவரைப் பத்திரமாகவும், பாதுகாப்புடனும் போலீசார்பார்த்துக் கொள்ள வேண்டும். அவரை மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ சித்திரவதை செய்யக் கூடாது.
அவருடைய உடல் நிலையையும் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள வேண்டும். உடல் நிலை சரியில்லை என்றால்அரசு செலவிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவரை சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டியதுசி.பி.சி.ஐ.டியின் டி.எஸ்.பி. நாகராஜனின் கடமை.
தினமும் காலை மற்றும் மாலையில் கோபாலுடைய வக்கீல் அவரை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திற்கு வந்துசந்தித்து அவருடைய உடல்நிலை உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நீதிபதி ராஜேந்திரன்உத்தரவிட்டார்.
இதையடுத்து கோபாலை நாகராஜன் பலத்த பாதுகாப்புடன் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தலைமை அலுவலகத்திற்குஅழைத்துச் சென்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications