முக்கிய அமைதி குழுவில் இருந்து புலிகள் விலகல்
கொழும்பு:
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து இரு தினங்களுக்கு முன் விலகிய விடுதலைப் புலிகள் இப்போதுமனிதாபிமானத் தேவைகளுக்கான மறுசீரமைப்புக் கமிட்டியில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இதில் புலிகள், இலங்கை அரசு தவிரநார்வே அமைதிக் குழுவினரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மனிதாபிமானத் தேவைகள் கமிட்டிக்குஜப்பானிய அமைதித் தூதர் யசுஷி அகாஷி ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு அளித்த உறுதிமொழிகள் எதுவும் முழுமையாகநிறைவேற்றப்படவில்லை. இதனால் அடுத்த சுற்று தாய்லாந்து பேச்சுவார்த்தையையும், ஜப்பான் நிதியுதவிமாநாட்டையும் புலிகள் புறக்கணிக்க உள்ளனர்.
இந் நிலையில் உடனடி மனிதாபிமான தேவைகளுக்கான மறுசீரமைப்புக் கமிட்டியில் இருந்தும் விலகிக்கொள்வதாக புலிகள் இன்று அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகளில் நாங்கள் பங்கேற்பது என்பது முழுக்க முழுக்க இலங்கை அரசின் கைகளில்தான் உள்ளது என்றும் புலிகள் கூறியுள்ளனர். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொள்ளப்பட்டவிஷயங்களை காலம் தாழ்த்தாமல் அரசு அமலாக்க வேண்டும்.
அதைச் செய்தால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வது எங்களுக்கு பிரச்சனையாக இருக்காது என புலிகளின்அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக மனிதாபிமான தேவைகளுக்கானகமிட்டியின் இலங்கை அரசுப் பிரதிநிதி பெர்னார்ட் குணதிலகேவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
அதில், இனப் போரால் குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் குடியேறச் செய்வது மிகஅவசியமான, அவசரமான தேவையாகும். அதற்கு முதலில் வட-கிழக்குப் பகுதியை சீரமைத்தாக வேண்டும்.இதற்குத் தேவையான நிதியை உடனே நன்கொடையாளர் நாடுகளில் இருந்து வசூலிக்கும் முயற்சிகளை அரசுமேற்கொள்ள வேண்டும்.
ஓஸ்லோவில் கடந்த ஆண்டு நவம்பரில் வட-கிழக்குப் பகுதிகளை சீரமைக்க நிதியுதவி அளிக்க முன் வந்தநாடுகளிடம் இருந்து நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications