ஜெ. மீது எஸ்.ஆர்.பி. உரிமை பிரச்சனை: காளிமுத்து நிராகரிப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயக்குமார், சமீபத்தில் நியமிக்கப்பட்ட ராணிமேரிக் கல்லூரி முதல்வர், கடலூர் சிறை ஜெயிலர் ஆகியோர் மீது காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்இன்று சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டு வந்தார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த சபாநாயகர் காளிமுத்து மறுத்துவிட்டார்.
ஹிந்து நாளிதழ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது நேற்று சட்டசபையில் காளிமுத்து உரிமை மீறல்பிரச்சனையைக் கொண்டு வந்தார்.
எஸ்.ஆர்.பி. பதிலடி:
இதற்குப் பதிலடியாக இன்று ஜெயலலிதா உள்பட 4 பேர் மீது சட்டசபையில் இன்று காலை எஸ்.ஆர்.பி. உரிமைமீறல் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
ராணி மேரிக் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்திய நலையில், அவர்களைப் பார்த்து ஆதரவுகூறுவதற்காகவே, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அங்கு சென்றனர். ஆனால் அவர்கள்கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், காவலாளியை மிரட்டியதாகவும் கூறி பொய்யான வழக்கைப் பதிவுசெய்துள்ளனர் சென்னைக் காவல்துறையினர்.
பொய் வழக்கு:
ஸ்டாலின் கல்லூரிக்குள் நுழைந்தது, அதன் பிறகு அவர் பேசியது எதையுமே நேரில் பார்க்காத கல்லூரி முதல்வர்,அவர் மிரட்டினார், அத்துமீறி நுழைந்தார் என்று பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார்.
கடமையாற்றச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் மீது பொய்யான வழக்கைப் போட்டுள்ளதன் மூலம், ஜெயலலிதா,கல்லூரி முதல்வர், காவல்துறை ஆணையர், சிறை ஜெயிலர் ஆகியோர் தங்களது உரிமைகளை மீறி நடந்துகொண்டுள்ளனர்.
இதனால் தான் இந்த நான்கு பேர் மீதும் உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்துள்ளேன் என்றார்எஸ்.ஆர்.பி.
ஜெயலலிதா பதில்:
இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கையில், சட்டசபைக்கு உள்ளே எம்.எல்.ஏக்கள் என்ன பேசினாலும்அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், வெளியே அவர்கள் செய்யும் குற்றச் செயல்களுக்குநடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது.
கடந்த 1959ம் ஆண்டு இதுதொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்டாலின் கைதுவிஷயத்தில் எந்த உரிமை மீறலும் இல்லை. இதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என்றார்.
காளிமுத்துவின் மறுப்பு:
இதன் பின்னர் பேசிய காளிமுத்து சட்டசபைக்கு வெளியே குற்றச் செயல்களில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள்தாமரைக்கனி, தூத்துக்குடி பெரியசாமி, கும்மிடிப்பூண்டி வேலு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
எனவே எஸ்.ஆர்.பி. கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சினை தீர்மானம் நிராகரிக்கப்படுகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications