கோபால் கைது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நக்கீரன் ஆசிரியர் கோபால் தாக்கல் செய்த மனுவைவிசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் தருமாறு தமிழக அரசுக்கும் மத்தியஅரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வீரப்பனுக்கு பணம் கைமாறியதிலும், அதிரடிப்படையின் உளவாளி கொல்லப்பட்டதிலும் கோபாலுக்கு தொடர்புஇருப்பதாக முதலில் கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும்கூறி அவரை தமிழக அரசு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது.
கோபால் தீவிரவாத இயக்கங்களின் நோட்டீஸ்களை வைத்திருந்தது, நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது ஆகியவைபொடா சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் குற்றமாகும் என தமிழக போலீசார் கூறியுள்ளனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோபால் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதிமாத்தூர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
கோபாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துல்சி ஆஜரானார். அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இரண்டுவாரத்துக்குள் இந்த கைது குறித்து விளக்கம் தருமாறு தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர்.
போலீஸ் காவல் தொடரும்...
அதே நேரத்தில், கோபாலின் போலீஸ் காவலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புதெரிவித்து விட்டது.
நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்க பொடா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்கப்பட்டு வருகிறார். தன்னை போலீஸ் காவலில் அனுப்பியதை எதிர்த்து கோபால் உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
அதில், போலீஸ் காவலில் நான் இருந்தால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும், திமுக தலைவர் கருணாநிதி,நடிகர் ரஜினிகாந்த், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ஆகிய முக்கியப் பிரபலங்களுக்கு எதிராக வீரப்பன் விஷயத்தில்என்னிடம் பொய்யான வாக்குமூலம் வாங்கவும் முயற்சி நடக்கிறது.
போலீஸ் காவலில் என்னை வைத்து நான் கூறியதாக, பொய்யான வாக்குமூலம் தயார் செய்ய முயற்சிக்கின்றனர்.இதனால் என்னை போலீஸ் காவலில் வைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் தினகர் மற்றும் அசோக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
போலீஸ் காவலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோபால் அச்சம் தெரிவித்திருப்பது குறித்து விளக்கம்அளிக்குமாறு சிபிசிஐடி போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இறுதியில், கோபாலை போலீஸ் காவலில் வைக்க இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் சிபிசிஐடி கூடுதல்டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
கோபாலின் இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 28ம் தேதி நடக்கும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
துருவித் துருவி விசாரணை:
இதற்கிடையே தற்போது தங்கள் காவலில் உள்ள கோபாலிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவித் துருவிவிசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து கோயம்புத்தூர் சி.பி.சி.ஐ.டியின் டி.எஸ்.பி.நாகராஜன், கோபாலிடம் விசாரணை நடத்தினார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல், அவரை மீட்க முயற்சி செய்தது, வீரப்பனுடன் தொடர்புகொண்டது, ராஜ்குமாரை மீட்க பணம் கைமாறியதா, எப்படி மாறியது, யார் யாருக்கு எவ்வளவுகொடுக்கப்பட்டது, கருணாநிதிக்கும் ரஜினிக்கும் இதில் தொடர்புள்ளதா, பணத்தை எடுத்துச் சென்றதுயார் என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கோபாலிடம் கேட்கப்பட்டன.
அதற்கு அவர் பதிலளித்து வருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூர் உள்ளிட்ட வேறு சிலஇடங்களுக்கும் கோபால் அழைத்துச் செல்லப்படலாம் என்று கூறப்படுகிறது.
கோபாலிடம் ரஜினி, கருணாநிதிக்கு எதிராக ஏதாவது வாக்குமூலம் வாங்கி அவர்களையும்விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வரும் 29ம் தேதி மாலை 5.45 மணியளவில் கோபாலை மீண்டும் ஆஜர்படுத்துமாறு பொடாநீதிமன்ற நீதிபதி எல். ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications