ராணி மேரி கல்லூரியை இடிக்க தடை எதிரொலி: டெல்லியில் தமிழக அதிகாரிகள் முகாம்
சென்னை:
ராணி மேரி கல்லூரியை இடிக்கத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவைத் திரும்பப்பெறும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மற்றும் சுற்றுச் சூழல் துறைசெயலாளர் இளங்கோவன் ஆகியோரை டெல்லிக்கு அனுப்பியுள்ளார் ஜெயலலிதா.
கடலோரப் பகுதிகளில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கட்டடங்களை இடிப்பதற்குத் தடை விதித்துமத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது.
மேலும் கடற்கரை அருகே ரூ.5 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டடங்கள் கட்டுவதற்குஅமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இதனால் சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியையும் இடிக்க வேண்டும்என்றாலோ, அங்கு தமிழக அரசின் தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்றாலோ சுற்றுச்சூழல் துணை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டிய நிலைக்குத் தமிழக அரசுதள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்தப் புதிய உத்தரவைத் திரும்பப் பெறும் முயற்சியில் ஜெயலலிதாதீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசுவதற்காக லட்சுமி பிரானேஷ் அவசர அவசரமாக டெல்லிக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பாகவே இளங்கோவன் டெல்லி சென்று சேர்ந்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுதான் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சராக உள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications