குழந்தைகளுக்கு தாயின் இனிஷியல்: 1994 அரசாணை எங்கே?- தேட ஜெ. உத்தரவு
சென்னை:
தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தாயின் இனிஷியலை வைப்பது தொடர்பாக முந்தைய அதிமுகஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசாணை (government order) பைல் தொலைந்து போய்விட்டதுதெரியவந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டமன்றத்தில் இன்று ஜெயலலிதா பேசுகையில்,
கடந்த 1994ம் ஆண்டு என்னுடைய ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதுதொடர்பாக ஒரு அரசாணை கொண்டுவரப்பட்டது.
விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்கள் ஆகியோர்தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கும்போது அந்தக் குழந்தைகளுக்கு யாருடையஇனிஷியலைப் போடுவது என்ற குழப்பம் எழுந்தது.
அந்தக் குழப்பத்தைத் தீர்த்து அந்தப் பெண்களின் முதல் எழுத்தையே இனிஷியலாகப் போடும்வகையில் 1994ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறையில் இருக்க வேண்டிய அந்த அரசாணை தொடர்பான பைல் தற்போதுகாணாமல் போய் விட்டது. அதைத் தேடுமாறு கல்வித் துறை அமைச்சர் செம்மலைக்குஉத்தரவிட்டேன். ஆனால் அந்த அரசாணையின் நகல் மட்டுமே தற்போது கிடைத்துள்ளது.
உண்மையான பைல் காணாமல் போனது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த விரைவில்உத்தரவிடப்படும். மேலும் இந்த அரசாணை விரைவில் மாற்றப்பட்டு புதிய அரசாணைவெளியிடப்படும்.
இனிமேல் இரு இனிஷியல்கள்:
பாமக அறிவித்துள்ள யோசனையின்படி, குழந்தைகளின் பெயருக்கு முன் தாயின் பெயரை முதல்இனிஷியலாகவும், தந்தையின் பெயரை 2வது இனிஷியலாகவும் சேர்க்க இந்தப் புதிய அரசாணைவழி செய்யும்.
அந்தக் குடும்பத்தினர் விரும்பினால் மட்டுமே இம்முறை கடைப்பிடிக்கப்படும். தாய் அல்லதுதந்தையின் இனிஷியல்களில் ஏதாவது ஒன்று போதும் என்றால் அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்என்றார் ஜெயலலிதா.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications