காஷ்மீரில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல்கள் ஆரம்பம்: இரு தமிழக வீரர்கள் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாமின் மீது இன்று ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாசஅமைபின் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில்2 வீரர்களும், 2 தீவிரவாதிகளும், பொது மக்களில் ஒருவரும் பலியாயினர்.
காஷ்மீரில் இந்த ஆண்டின் முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.எல்லையில் பனி உருக ஆரம்பித்துவிட்ட நிலையில் தீவிரவாதிகளின் ஊடுருவலும்அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தத் தயார் என பிரதமர் வாஜ்பாய் பலமுறைஅறிவித்துள்ள நிலையில் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பாக்-பந்திபுராவில் அமைந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின்முகாமின் மீது இன்று காலை 9.45 மணிக்கு வெடிகுண்டுகளை 3 தீவிரவாதிகள் வீசினர். அதேநேரத்தில் துப்பாக்கியால் சரமாரியாக சுடவும் ஆரம்பித்தனர்.
இதில் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதன் பின்னர் முக்கிய வாயிலுக்குள் நுழைய முயன்றனர்.அப்போது வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் அவர்கள் மீது பதிலடித் தாக்குதல்நடத்தினார். கண் இமைக்கும் நேரத்தில் இரு தீவிரவாதிகளையும் அவர் சுட்டுக் கொன்றார்.
இதில் ஒரு தீவிரவாதி தனது உடலில் குண்டுகளைக் கட்டியிருந்தான். அதில் துப்பாக்கிக் குண்டுபட்டதில் அந்தத் தீவிரவாதியின் உடல் வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட இன்னொரு தீவிரவாதிஅங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
தீவிரவாதிகள் வீசிய வெடிகுண்டு தாக்கி பால் விற்க வந்த ஒருவரும் பலியானார்.
காயமடைந்த வீரர்கள் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
1998ம் ஆண்டில் தான் பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புதற்கொலைப் படைத் தாக்குதல்களை காஷ்மீரில் ஆரம்பித்து வைத்தது. இந்த ஆண்டு துவக்கத்தில்இருந்து தற்கொலைத் தாக்குதல்கள் ஏதும் நடக்கவில்லை. இன்று தான் முதல் தாக்குதல் நடந்துள்ளது.
கோடையும் ஆரம்பித்துவிட்ட நிலையில் தாக்குதல்கள் தீவிரமாகலாம் என்று தெரிகிறது.
மேலும் தாக்குதல்கள்:
அதே போல பாரமுல்லா மாவட்டத்திலேயே சம்ப்ளார் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள்ஊடுருவியதையடுத்து அதை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்ததீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.
ராணுவ வீரர்களை நோக்கி சராமாரியாகத் துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள், கிரனைட்குண்டுகளையும் வீசி எறிந்தனர். இந்தத் தாக்குதலில் ராணுவ மேஜர் ஒருவரும், ஒரு ராணுவ வீரரும்சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தமிழக வீரர்கள் பலி:
இதற்கிடையே நேற்று மாலை தாவி பகுதியில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகள் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் தமிழகத்தைச்சேர்ந்தவர். சென்னை ராணுவப் பிரிவில் பணியாற்றி வந்தவர்கள். இவர்கள் தவிர மேலும் 2 தமிழகவீரர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இறந்த தமிழக வீரர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் விழுந்து 13 பாக் வீரர்கள் பலி:
இதற்கிடையே பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 வீரர்கள் பலியாகியுள்ளனர். இன்றுபிற்பகலில் இந்த விபத்து நடந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications