ஜெயலலிதாவுடன் கிருஷ்ணசாமி ஜாதிச் சண்டை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் இடையே கடும் ஜாதிச்சண்டை மூண்டுள்ளது.
சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும் கூட ராமதாசும் கிருஷ்ணசாமியும்ஜாதி வெறியைப் பரப்பி வருகின்றனர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடியாக கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டசபையில் இல்லாத ஒருவரைப் பற்றி அவையில் பேசுவது மரபல்ல. அது விதிமுறையும் இல்லை. அதுதெரிந்திருந்தும் கூட எனக்குக் களங்கள் கற்பிக்கும் வகையில் ஜெயலலிதா பேசிய பேச்சை வன்மையாகக்கண்டிக்கிறேன்.
திராவிட என்ற சாதியை- இனத்தை உள்ளக்கியே தனது கட்சியின் பெயரான அதிமுக உள்ளது என்ற அடிப்படைஉண்மையைக் கூட அறவே மறந்துவிட்டு, கிளையின் நுனியில் உட்கார்ந்து ஒருவன் மரத்தின் அடியை வெட்டுவதுமாதிரி ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
இன்று தான் ஜாதியே வந்ததைப் போலவும் நான் தான் ஜாதியையே உருவாக்கியதைப் போலவும் பேசியிருக்கிறார்ஜெயலலிதா.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் மக்களிடையே பிராமணர், சத்திரியர், வைசியர். சூத்திரர்என்ற பிரிவினையை உருவாக்கியது ஜெயலலிதாவின் பார்ப்பன ஜாதியா? அல்லது நான் பிறந்த சூத்திர ஜாதியா?
உழைக்காமல் பிறர் உழைப்பை உறிஞ்சி வாழும் சாதி தான் அந்தணர். அனைவரையும் அடக்கி ஆள்வோர்சத்திரியர். வணிகம் செய்வோர் வைசியர். இவர்களுக்குக் கீழே உணைத்துப் போட சூத்திரன். அவர்களுக்கும் கீழேஎந்த உடமையும் இல்லாத மண்ணின் பூர்வீகக் குடிகள்,
இப்படி அடுக்கடுக்காய் மக்களைப் பிரித்து வைத்து என் ஜாதியா? ஜெயலலிதாவே, உங்கள் ஜாதியா?
இரண்டாயிரம் ஆண்டுகளாய் கல்வி உயர் ஜாதியினரின் பூர்வீக சொத்தாக அல்லவா இருந்தது. 80 சதவீதசூத்திரனும் பழங்குடி மக்களும் படிப்பின் வாசத்தைக் கூட அல்லவா அறியவிடாமல் தடுக்கப்பட்டனர். வேதம்,உபநிதடதம், வானியல், கணிதம் எல்லாம் உங்களுக்கு மட்டுமல்லவா சொத்தாக இருந்தது.
இத்தனை கல்வி கற்றும் கூட அந்தணராக- பிராமண சாதிக்காரராகத் தான் இருந்தீர்களே தவிர கீழ்மட்டத்தினரையும் மதிக்கும் உயர்ந்தவர்களாக மாறவே இல்லையே. இரணாடாயிரம் ஆண்டு கல்வயே உங்களதுஜாதி வெறியை மாற்றவில்லை.
இன்றும் நான் ஒரு பார்ப்பனத்தி தான் என சட்டமன்றத்திலேயே உங்களால் பேச முடிகிறதே. அது தான்உண்மையான ஜாதி வெறி.
வந்தேறி பார்ப்பனர்களான உங்களால் இந்த மண்ணின் திராவிட இன மக்கள் அடிமையானார்கள். சொத்துஇந்தார்கள். தீண்டத்தகாதவர்கள் என்ற இழி நிலைக்கு ஆளானார்கள்.
இவ்வாறு கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதற்கு ஜெயலலிதாவும் தனது கட்சியில் உள்ளதாழ்த்தப்பட்ட இனத்தினரைக் கொண்டு பதிலடி தருவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications