காரைக்கால் மக்களுக்கு விரைவில் தேசிய அடையாள அட்டை

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக காரைக்கால் பகுதி மக்கள்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று பாண்டிச்சேரி அரசு அறிவித்துள்ளது.

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் வரும் காரைக்கால் பகுதி மக்களுக்கு விரைவில் தேசியஅடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று பாண்டிச்சேரி கல்வித் துறை அமைச்சர்லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

அவர் சட்டசபையில் மேலும் கூறுகையில்,

பாண்டிச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் வரும் ஆண்டில் மதிப்புக் கல்வி என்ற முறைஅறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆசிரியர்களுக்கு டிரெய்னிங் வழங்குவதற்கான புதிய முறையும்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும் வானொலி மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும்வகையில் புதிய எப்.எம். நிலையம் அமைக்கப்படும். இதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைஅமைச்சருடன் பேசி வருகிறோம்.

"அனைவருக்கும் கல்வி" திட்டம் கடந்த ஆண்டு முதல் பாண்டிச்சேரியில் வெற்றிகரமாகச்செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 6 முதல் 14 வயதுள்ள சிறுவர், சிறுமிகள் பயன் பெறுவார்கள்என்றார் லட்சுமிநாராயணன்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+