வேலூரில் 2 சகோதரர்களுக்கு சார்ஸ் நோய்
வேலூர்:
வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சார்ஸ் நோய் அறிகுறிகளுடன் 2 சகோதரர்கள்சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக இப்போதுதான் சார்ஸ் நோய் பரவியுள்ளது.இதனால் தமிழகத்திலும் சார்ஸ் பீதி ஏற்பட்டுள்ளது.
வேலூர் அருகே உள்ள சந்தவாசலைச் சேர்ந்த ஏழுமலை (37) என்பவர் சமீபத்தில் மலேசியாவில்இருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக மலேசியாவில் இவர் டிரைவராகப் பணியாற்றிவருகிறார்.
கடந்த 15 நாட்களுக்கு முன் வேலூர் திரும்பிய ஏழுமலைக்கு திடீரென்று உடல் நிலைபாதிக்கப்பட்டது. கடும் காய்ச்சலுடன் அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தொடர்ந்து அவரது சகோதரர் சந்திரனின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துஅவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர்களுக்கு பல சோதனைகளும் நடத்தப்பட்டன. இதில் இருவருக்கும் சார்ஸ் நோய்க்கானஅறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனித் தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுவைக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மருத்துவமனையில் சார்ஸ் நோய் தாக்குதலை உறுதி செய்யும் சோதனைகள்நடத்துவதற்கான வசதிகள் ஏதும் இல்லை. இதனால் இந்த சகோதரர்களின் ரத்த சாம்பிள்கள்பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந் நிலையில் சந்தவாசலில் உள்ள இந்த சகோதரர்களின் வீட்டில் வேறு யாருக்காவது சார்ஸ் நோய்தாக்குதல் இருக்கிறதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் குழு வேலூர் மருத்துவமனையில்இருந்து கிளம்பிச் சென்றுள்ளது.
இதனால் வேலூரில் பெரும் பீதி கிளம்பியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications