நாற்காலியுடன் காவல் நிலையத்துக்கு வந்த ஸ்டாலின்
மதுரை:
காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்ற ஸ்டாலினுக்கு போலீசார் உட்கார சேர் தர மறுத்ததால்,அவர் ஒரு மடக்கு நாற்காலியையும் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வந்தார்.
அதில் உட்கார்ந்து கையெழுத்துப் போட்டுவிட்டு சேரை மடக்கி எடுத்துக் கொண்டு திரும்பினார்.இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நாளை வரை ஸ்டாலின் மதுரையில்தங்கியிருந்து தினமும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்றுநிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்குச் கையெழுத்திடச் சென்றார்.ஆனால், அவருக்கு உட்கார நாற்காலியைக் கூட போலீசார் தரவில்லை. இதனால் என்னைகுற்றவாளி என்று நீங்களே முடிவு செய்துவிட்டீர்கள்? கோர்ட்டை மதிக்க மாட்டீர்களா என்றுபோலீசாரிடம் சத்தம் போட்டார் ஸ்டாலின்.
அதே நேரத்தில் உங்களைக் குறை கூறி பயனில்லை. மேலே இருப்பவர்கள் ஆட்டுவிக்கிறார்கள்.நீங்கள் ஆடுகிறீர்கள் என்று கூறிவிட்டு வெளியே வந்தார்.
இந்நிலையில் மீண்டும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்குக் கையெழுத்துப் போட வந்தார்ஸ்டாலின். அப்போது தன்னுடன் ஒரு மடக்கு நாற்காலியையும் எடுத்து வந்திருந்தார்.
தான் கொண்டு வந்திருந்த நாற்காலியை போலீஸ் ஸ்டேஷனில் விரித்து அதில் உட்கார்ந்தவாறேகையெழுத்துப் போட்டார். இதைத் தடுப்பதா இல்லையா என்று தெரியாமல் போலீசார் கையைப்பிசைந்து கொண்டு நின்றனர்.
கையெழுத்துப் போட்டு முடித்த பின் அவரே நாற்காலியை மீண்டும் மடக்கி எடுத்துக் கொண்டுவெளியே வந்தார்.
(படம்- நன்றி தினகரன்)
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மேலிடத்தின் உத்தரவுப் படி போலீசார் எனக்கு நாற்காலிபோட மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் நானே நாற்காலியைஎடுத்து வந்தேன்.
மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் அங்குள்ளஅதிகாரிகள் அவர்களை உட்காரச் சொல்வது மரபு. ஜெயலலிதா ஆட்சியில் மரபும் கிடையாது,தர்மமும் கிடையாது என்றார் ஸ்டாலின்.
மதுரை பிஷப்புடன் சந்திப்பு:
இந் நிலையில் இன்று ஸ்டாலின், மதுரை டையோசிசின் புதிய அர்ச் பிஷப்பான அருள்தந்தை பீட்டர்பெர்னாண்டோவை நேரில் சந்தித்துப் பேசினார்.
நேற்று தான் பிஷப் தனது புதிய பதவியை ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் அவரை மு.க. அழகிரியும் தனியே சந்தித்துப் பேசினார்.
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என பிஷப் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications