வாயில் கறுப்பு துணி கட்டி மருத்துவ மாணவர்கள் 4வது நாள் போராட்டம்
சென்னை:
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தங்கள் போராட்டத்தைக் கைவிட மருத்துவக் கல்லூரி மாணவர்கள்மறுத்துவிட்டனர். அவர்களது வேலை நிறுத்தமும் வகுப்புப் புறக்கணிப்பும் நான்காவது நாளை எட்டியுள்ளது.
இன்று அவர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் அவுட்-பேசன்ட் எனப்படும் புறநோயாளிகள் தொடர்ந்து சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது, இந்திய மருத்துவக் கவுன்சில்அங்கீகாரம் பெறாத படிப்புகளுக்கு விரைவில் அங்கீகாரம் பெற்றுத் தர வேண்டும், மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும், கட்டண உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடந்துவருகிறது.
போராட்டத்தைக் கைவிட்டால் அவர்களுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக நலத்துறைஅமைச்சர் செம்மலை கூறியிருந்தார். ஆனால், அதை மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இன்றும் சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய நகரங்களில் மருத்துவக் கல்லூரிமாணவர்கள் கண்டன ஆர்பாட்டமும் பேரணியும் நடத்தினர்.
இவர்கள் வாயில் கறுப்புப் பட்டை அணந்து போராட்டம் நடத்தினர். இவர்களுடன் பல் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications