பொடா: தவறு செய்யாதவர்கள் கஷ்டப் பட வேண்டுமா?- கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாது என்ற உறுதியை துணைப் பிரதமர் அத்வானிகாப்பாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

கோயம்புத்தூரில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்காகத்தான் பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றுஅப்போதே திமுக எச்சரித்தது. குறிப்பாக, தமிழகத்தில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும்என்று எச்சரிக்கை செய்தோம்.

இருந்தாலும் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாது என அத்வானி அப்போது உறுதிஅளித்தார். அதன் பின்னரே பொடா சட்டத்திற்கு ஆதரவாக நாங்கள் நாடாளுமன்றத்தில்வாக்களித்தோம்.

ஆனால் தற்போது பொடா சட்டம் தமிழகத்தில் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.தவறு ஏதும் செய்யாதவர்கள் பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு கஷ்டப்படலாமா?

இவ்விஷயத்தில் அத்வானி அக்கறையுடனும், வேகமாகவும் செயல்பட வேண்டும். சிலஉருப்படியான முடிவுகளை மத்திய அரசு விரைவில் எடுக்க வேண்டும்.

பொடா சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம்எழுதினேன். ஆனால் அவரோ மத்திய அரசோ இன்னும் எனக்குப் பதில் அனுப்பவில்லை.

பொடா சட்டம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடுகூறியுள்ளார். இது அந்தக் கட்சியின் சொந்தக் கருத்து. அதைப் பற்றி நான் ஒன்றும் கூறவிரும்பவில்லை.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் எதிர்பாராத அளவுக்குஅதிகரித்துள்ளன. இதனால் சட்டம்-ஒழுங்கு முழுவதுமாகச் சீர் குலைந்துள்ளது.

தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வாஜ்பாயிடம் திமுக, மதிமுக மற்றும்பாமக எம்.பிக்கள் சமீபத்தில்தான் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதைப் பரிசீலிக்ககால அவகாசம் தேவைப்படலாம்.

ஆனாலும் தமிழகத்தில் அரசியல் சட்டம் 356 பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம்நாங்கள் கோரவில்லை என்றார் கருணாநிதி.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+