"இறந்து போன" பெண் உயிரோடு எழுந்தார்: உறவினர்கள் அலறி அடித்து ஓட்டம்
கரூர்:
கரூர் அருகே இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்கிற்காகத் தயார் செய்யப்பட்ட பெண் திடீரென்றுஇருமியவாறே உயிருடன் எழுந்தார். இதைக் கண்ட அவருடைய உறவினர்கள் சிலர் அலறிஅடித்துக் கொண்டு ஓடினர்.
கரூர் தன்னாசிகவுண்டன் புதூரைச் சேர்ந்த ராஜப்பன் என்ற பால் வியாபாரியின் மனைவிஅருக்காணியம்மாள் (46). இவர் கடந்த 5 ஆண்டுகளாக இருதய நோய் மற்றும் ரத்த அழுத்தநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் கோயம்புத்தூரில் உள்ளஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் ரூ.37,000 செலவழித்தும் கூட அவர்உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அருக்காணியம்மாளின் நாடித் துடிப்பு முற்றிலுமாக நின்றுபோனது. அவர் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.
இதையடுத்து அருக்காணியம்மாளின் "உடலை" தன் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ராஜப்பன்முடிவு செய்தார். மேலும் அவருடைய இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் ஊரில்உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்து விட்டார் ராஜப்பன்.
இதையடுத்து தன்னாசிகவுண்டன் புதூரில் இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் கூடி விட்டனர். சிறிதுநேரத்தில் அருக்காணியம்மாளின் "உடலுடன்" ஆம்புலன்சில் வந்து இறங்கினார் ராஜப்பன்.
ஆம்புலன்சில் இருந்து அருக்காணியம்மாளின் "உடல்" இறக்கப்பட்டபோது அவர் திடீரெனஇருமினார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்களில் சிலர் அலறி அடித்துக் கொண்டுஅங்குமிங்கும் ஓடினர்.
வேறு சிலர் தைரியமாக அருக்காணியம்மாளை பத்திரமாக ஆம்புலன்சிலிருந்து இறக்கினர். அதேஊரில் உள்ள ஒரு ஹோமியோபதி டாக்டர் வந்து அருக்காணியம்மாளுக்கு அவசர சிகிச்சைஅளித்தார். குளூக்கோஸ் ஏற்றப்பட்டது.
சிறிது நேரத்தில் அருக்காணியம்மாள் கண் விழித்தார். கணவர் உள்ளிட்ட அனைவரையும்அடையாளம் கண்டு கொண்டு பேசவும் ஆரம்பித்தார் அவர்.
இதைக் கண்ட அனைவரும் சந்தோஷம் அடைந்தனர். அருக்காணியம்மாளின் இறுதிச் சடங்கிற்காகவந்த உறவினர்கள் அவர் உயிருடன் மீண்டதைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அவருடைய உடல் நலத்தை மட்டும் விசாரித்து விட்டு அவர்கள் வீடு திரும்பினர். இச்சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications