விழுப்புரம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்: 4 பேர் பலி
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
பாண்டிச்சேரியில் உள்ள கரசூர் குளிர்பான நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு மினி லாரிஉளுந்தூர்பேட்டையிலிருந்து பாண்டிச்சேரிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தது.
அப்போது விழுப்புரம் அருகே ஆந்திர லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அதன்டிரைவரும் கிளீனரும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாக வேகமாக வந்த மினிலாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
மேலும் எதிரே வந்து கொண்டிருந்த சோப் ஆயில் லாரி மீதும் மினி லாரி நேருக்கு நேர் மோதியது.பின்னர் அருகிலிருந்த ஒரு பனை மரத்தில் மோதி மினி லாரி நின்றது.
இவ்விபத்தில் குளிர்பான நிறுவன உரிமையாளர் செல்வராஜ் மற்றும் தொழிலாளி ஆறுமுகம்ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர லாரியின் டிரைவர்வெங்கடேஸ்வர ராவ் மற்றும் கிளீனர் கிருஷ்ணா ஆகியோரும் பின்னர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்தவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம்போலீசார் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications