காஷ்மீரில் 6 பாக். தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மூ:
காஷ்மீரில் இன்று 6 பாகிஸ்தான் தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
தோடா மாவட்டத்தில் உள்ள காண்டோ வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக்கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.
அங்குள்ள ஒரு குகைக்குள் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அப்போதுராணுவத்தினரை நோக்கித் தீவிரவாதிகள் சராமாரியாகச் சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையேகடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்த அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், கிரனைட் குண்டுகள் மற்றும் ஒரு வயர்லெஸ்சாதனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் மேலும் 3பாகிஸ்தான் தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிகள், கிரனைட் குண்டுகள்,ராக்கெட் மற்றும் ரோடியோ ஆகியவை அப்போது கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் ரஜெளரி பகுதியிலும் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவு கடும்துப்பாக்கிச் சண்டை நடந்தது. போலீசார் மீது தீவிரவாதிகள் திடீரென சுட்டதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே சண்டை தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் இந்தச் சண்டை நீடித்தது.
காஷ்மீர் பகுதியில் உள்ள மலைகளில் பனி உருகத் தொடங்கியதையடுத்து ஏராளமான பாகிஸ்தான்தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வார இறுதியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் காஷ்மீரில் தங்களுடைய தாக்குதலையும்ஆரம்பித்துள்ளனர். வானொலி நிலையத்தின் மீது கடந்த சனிக்கிழமை தற்கொலைப் படைதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதும் நினைவிருக்கலாம்.
இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 2 சிறுவர்களை ராணுவத்தினர்மீட்டுள்ளனர். அந்தச் சிறுவர்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அழைத்துச் சென்றுபயிற்சி அளிக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக அந்தச் சிறுவர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications