சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து விட்டது: எதிர்க் கட்சிகள் புகார்- ஜெ. மறுப்பு
சென்னை:
தமிழகத்தில் நடைபெற்றுள்ள ஓரிரு கொலை, கொள்ளைச் சம்பவங்களை மட்டுமே வைத்துசட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக எதிர்க் கட்சிகள் புகார் செய்யக் கூடாது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
வேலூர் மற்றும் கோயம்புத்தூரில் கடந்த வாரம் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள்தொடர்பாக சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பாமக எம்.எல்.ஏ.கணேசன் ஆகியோர் இன்று சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதுபோன்ற சம்பவங்களால் தமிழகத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது என்றும் சட்டம்-ஒழுங்குமுழுவதுமாகச் சீர்குலைந்து விட்டது என்றும் அவர்கள் புகார் கூறினர். வேலூர் கொலைச்சம்பவத்தில் இன்னும் கொலையாளி கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்போது அவர்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் ஆங்காங்கே கொலை,கொள்ளைச் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் இந்த ஒரு சில சம்பவங்களை மட்டும் வைத்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகக்கூறுவது தவறு.
தமிழகக் காவல் துறையினரைக் குறை சொல்வதும் மிகவும் தவறானது. பிற மாநிலங்களுடன்ஒப்பிடுகையில் தமிழகப் போலீசார் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றுஉறுதியாகக் கூறலாம்.
கொலையாளிகளையும், கொள்ளைக்காரர்களையும் தனிப் படைப் போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். ஆனால் அவர்கள் எப்போது பிடிபடுவார்கள் என்பதற்கான கால, நேரத்தையெல்லம்நாம் நிர்ணயம் செய்ய முடியாது.
விரைவில் அவர்களைப் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார்மேற்கொண்டுள்ளனர் என்றார் ஜெயலலிதா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications