கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்: காளிமுத்துவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
டாக்டர் குமாரதாஸ் உள்ளிட்ட 4 பேரை கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. பதவியிலிருந்துநீக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகவிளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் காளிமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் குமாரதாஸ், ஹக்கீம், தமிழரசன் உள்பட 4எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்து விட்டனர்.
மேலும் தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி அதன் எம்.எல்.ஏக்களாகச்செயல்பட்டு வந்தனர். சமீபத்தில் கட்சியையே கூண்டோடு கலைத்து விட்டு அதிமுகவில்ஐக்கியமானயினர்.
இதையடுத்து அந்த 4 எம்.எல்.ஏக்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி காளிமுத்துவிடம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருடைய கோரிக்கையை காளிமுத்துநிராகரித்து விட்டார். அவர்கள் அதிமுக எம்.எல்.ஏக்களே என்று காளிமுத்து அறிவித்தார்.
காளிமுத்துவின் இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரியும் வேண்டும், 4 பேரின் பதவியையும்பறிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் பாலசுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், இது தொடர்பாக விளக்கம்அளிக்குமாறு காளிமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
காளிமுத்து தவிர சட்டசபை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட 4 எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கும்நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கோவிந்தராஜ் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஜூன் 30ம் தேதிக்குஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications