சென்னை-சிங்கப்பூர்: 2 ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து
சென்னை:
பைலட்டுகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை-சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த 2ஏர்-இந்தியா விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன.
சார்ஸ் நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்ல மாட்டோம் என்று பைலட்டுகள்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே இது தொடர்பான அறிவிப்புகள் கடைசி நேரத்தில்வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரிலிருந்து இன்று காலை 8.45 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய ஏர்-இந்தியா(ஏ.ஐ.473) விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. காலை 7 மணிக்குத்தான் இதுதொடர்பான அறிவிப்பை ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்டது.
இதனால் அந்த விமானத்தில் வருபவர்களை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில்காத்துக் கொண்டிருந்த அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த விமானம் சென்னையிலிருந்து மும்பைக்கும் செல்ல இருந்தது.
இதற்கிடையே இன்று காலை சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டிய மற்றொருஏர்-இந்தியா விமானமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதுவரை 27 பைலட்டுகள் சஸ்பெண்டு:
இதற்கிடையே ஏர்-இந்தியா நிறுவனம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மேலும் 15 பைலட்டுகளைசஸ்பெண்ட் செய்துள்ளது.
இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பைலட்டுகளின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.மேலும் 56 பைலட்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏர்-இந்தியா நிறுவனம்அறிவித்துள்ளது.
மொத்தம் 159 பைலட்டுகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலநாடுகளுக்குச் செல்லவிருந்த ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும்குறிப்பிடத்தக்கது.
12 பைலட்டுகள் மீது குற்றப்பத்திரிக்கை:
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 12 பைலட்டுகளுக்கு எதிராக ஏர்-இந்தியா நிறுவனம்குற்றப் பத்திரிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளது.
பணிக்கு வர மறுத்ததாகவும், பல குறிப்பிட்ட இடங்களுக்கு விமானத்தை இயக்க மறுத்ததாகவும்அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றப்பத்திரிக்கை தொடர்பாக அந்த பைலட்டுகள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதில்அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பைலட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து ஏர்-இந்தியா நிறுவனம்மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று பைலட்டுகள் சங்கம் அறிவித்துள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications