உலகம் முழுவதும் இதுவரை 332 பேர் பலி
பெய்ஜிங்:
சார்ஸ் நோய்க்கு உலகம் முழுவதும் இதுவரை 332 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் மட்டும் 139பேர் இறந்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் சார்ஸ் நோய் சீனாவில்தான் தோன்றியதாகக் கருதப்படுகிறது.இந்நோய் குறித்த தகவல்களை ஆரம்பத்திலேயே சீனா தெரிவிக்க மறுத்து விட்டதால் இதுபடிப்படியாக பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
சீனாவில் மட்டும் இதுவரை 139 பேர் இந்நோய்க்குப் பலியாகி விட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1,100 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.
ஆனால் பல மடங்கு குறைவாகவே இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் மட்டும் சுமார் 8,000 பேர் சார்ஸ் நோய் காரணமாகத்தனியாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஹாங்காங்கிலும் சார்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் இங்கு இறந்துள்ளனர்.
இங்கு இதுவரை மொத்தம் 138 பேர் சார்ஸ் நோய்க்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 1,500 பேருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தைவானில் முதல் சார்ஸ் பலி:
இதற்கிடையே தைவானில் முதல் முறையாக சார்ஸ் நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தாய்சங்க் நகரில் உள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இதையடுத்து சிங்கப்பூர், வியட்நாம், சீனா, ஹாங்காங் மற்றும் கனடாவிலிருந்து தைவானுக்குள்யாரும் வரக் கூடாது என அந்நாடு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே சார்ஸ் நோய் பரவுவதைத் தீவிரமாகத் தடுப்பதற்குத் தேவையான அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications