ஹிந்து, முரசொலி நாளிதழ்கழ் மீது மீண்டும் காளிமுத்து பாய்ச்சல்
சென்னை:
ஹிந்து நாளிதழ் மீது மீண்டும் உரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டு வந்துள்ளார் சபாநாயகர்காளிமுத்து. அதே போல திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான "முரசொலி" மீதும் உரிமை மீறல்பிரச்சனையை எழுப்பியுள்ளார்.
தங்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பிய காளிமுத்து குறித்து Rising intolerance,என்ற தலைப்பில் இந்து நாளிதழ் கடந்த 25ம் தேதி தலையங்கம் வெளியிட்டிருந்தது. அதை மொழி பெயர்த்துமுரசொலியும் வெளியிட்டிருந்தது.
இந் நிலையில் இன்று சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ. செ.கு. தமிழரசன், இந்து நாளிதழ் மீண்டும்தனது உரிமையை மீறி செயல்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இவர் சமீபத்தில் அதிமுகவுக்குதாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறுகையில், இந்து நாளிதழும் முரசொலியும் சட்டசபையின் கண்ணியத்தையும்,கெளரவத்தையும் பாதிக்கும் வகையில் தலையங்கத்தை வெளியிட்டுள்ளன. எனவே இதுதொடர்பாக சபாநாயகர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிமுக தீவிர ஆதரவாளரான சந்தானம் (பார்வர்ட் பிளாக்) அதை வழி மொழிந்தார். இதற்குப்பதிலளித்து காளிமுத்து பேசுகையில்,
கடந்த 12, 13 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடர்பாக ஹிந்து நாளிதழ்வெளியிட்ட செய்திகள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழைக் கெடுக்கும் வகையிலும், சட்டசபையில்பெருமையைக் குலைக்கும் வகையிலும் இருந்தன.
இதனால் கடந்த 23ம் தேதியே ஹிந்து பத்திரிக்கைக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனையைக்கொண்டு வந்தேன். அந்தப் பத்திரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயசட்டசபையின் உரிமை மீறல் குழுவுக்கும் பரிந்துரைத்தேன்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்திலும் தமிழகசட்டசபைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. சட்டசபையின்கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலான வார்த்தைகள் அந்தத் தலைங்கத்தில் உள்ளன.
மேலும் இந்தத் தலையங்கத்தை முரசொலி பத்திரிக்கையும் அப்படியே தமிழில் மொழி பெயர்த்துவெளியிட்டுள்ளது. இதுபோன்று தலையங்கம் எழுதுவதும் அதை மொழி பெயர்த்து மற்றொருபத்திரிக்கை வெளியிடுவதும் சட்டசபையின் உரிமையை மீறும் செயலாகும்.
சட்டசபைக்கு என்று கண்ணியமும், மரியாதையும், சில விதிமுறைகளும் உள்ளன. சபாநாயகர் என்றமுறையில் அவற்றைக் காக்கும் மிக முக்கியமான பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே ஹிந்து பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மீண்டும் உரிமை மீறல்குழுவிடம் பரிந்துரைத்துள்ளேன். அதேபோல் முரசொலி பத்திரிக்கையின் மீது நடவடிக்கைஎடுக்கவும் உரிமை மீறல் குழுவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் காளிமுத்து.
கடந்த வாரம் இந்து பத்திரிக்கையோடு சேர்த்து, சட்டசபை காங்கிரஸ் தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் மீதும் காளிமுத்து உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பினார் என்பதுநினைவுகூறத்தக்கது.
ஒரே வாரத்தில் இந்து நாளிதழ் மீது இருமுறை உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications