13 ஈராக்கியர்களை சுட்டுக் கொன்ற அமெரிக்க படையினர்
பாக்தாத்:
ஈராக்கில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டம் நடத்திய 13 ஈராக்கியர்களை அமெரிக்கப் படையினர்சுட்டுக் கொன்றனர். மேலும் 75 பேர் படுகாயமடைந்தனர்.
அந்தப் போராட்டத்தை அமெரிக்கப் படையினர் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.ஈராக்கை விட்டு அமெரிக்கப் படையினர் வெளியேற வேண்டும் என்று போராட்டம்நடத்தியவர்கள் அப்போது கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது திடீரென 2 பேர் அமெரிக்கப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சராமாரியாகச் சுடஆரம்பித்தனர். இதனால் அதிர்ந்து போன அமெரிக்கப் படையினர் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை நோக்கி அமெரிக்கப் படையினர் சுட ஆரம்பித்தனர்.இதில் 13 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 75 பேர் குண்டுக் காயம் அடைந்தனர்.
சதாமின் மற்றொரு அமைச்சர் சரண்:
இதற்கிடையே சதாம் ஹூசேன் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த அமிர்ரஷீத் முகமது அல்-உபய்தி அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார்.
சதாம் உள்பட அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் 55 பேர் உள்ளனர். தற்போது ரஷீத்கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதுவரை இந்தப் பட்டியலில் உள்ள 7 பேர் அமெரிக்கப்படையினரிடம் பிடிபட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications