ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் நெடுமாறன் மீண்டும் மனு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்துள்ளனர்.
இம்மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன்கைது செய்யப்பட்டார். இதையடுத்து தமிழர் தேசிய இயக்கப் பிரமுகர்களான சுப வீரபாண்டியன்,டாக்டர் தாயப்பன், பாவாணன் உள்ளிட்ட 5 பேர் ஆகியோரும் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் 6 பேரும்உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் பொடா நீதிமன்றத்திலேயே அவர்கள் ஜாமீன்கேட்கலாம் என்று கூறி உயர் நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து தங்களை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு சென்னை பூந்தமல்லியில் உள்ள பொடாசிறப்பு நீதிமன்றத்தில் 6 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் அவர்களுடைய ஜாமீன் மனுவை பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் நிராகரித்துவிட்டார். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சிகளை கலைத்து விடக் கூடும் என்பதால்ஜாமீன் அளிக்க முடியாது என்றும் நீதிபதி ராஜேந்திரன் கூறினார்.
இதைத் தொடர்ந்து நெடுமாறன் உள்ளிட்ட 6 பேரும் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் தங்களுக்குஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று நீதிபதி தினகர் மற்றும் நீதிபதிஅசோக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர். மேலும் கோடை விடுமுறைக்குப் பின்னர் இந்த மனு மீதான விசாரணைநடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications