வேலூர் நோயாளிக்கு சார்ஸ் உறுதி: ஆனால், குணமடைந்தார்
வேலூர்:
சிங்கப்பூரில் டிரைவராகப் பணியாற்றிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கு(வயது 37) சார்ஸ் நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏழுமலைக்கு சார்ஸ் நோய்தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அவர் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும், அவர்மூலம் பிறருக்கு இந்நோய் பரவும் என அஞ்சத் தேவையில்லை என்றும் டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சின்னபுஷ்பகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்ஏழுமலை. இவர் சிங்கப்பூரில் லாரி டிரைவராக உள்ளார். கடந்த 23ம் தேதி ஊர் திரும்பியஅவருக்கு கடும் காய்ச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டதால், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
அவருக்கு சார்ஸ் நோய் தாக்கியிருக்கலாம் என்று டாக்டர்கள் சந்தேகப்பட்டதால், அவர் தனிஅறையில் வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. சார்ஸ் நோய்பரிசோதனைக்காக அவரது ரத்தம் புனேயில் உள்ள தேசிய வரஸ் ஆராய்ச்சி மையத்துக்குஅனுப்பப்பட்டது.
அதில், ஏழுமலைக்கு சார்ஸ் நோய் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 4 நாட்களாகவே ஏழுமலைக்கு சார்ஸ் நோய் இல்லை என்று வேலூர் மாவட்டகலெக்டர் கூறிக் கொண்டிருந்தார். அதே போல தனது கணவருக்கு சார்ஸ் இல்லை என ஏழுமலையின்மனைவியும் கூறியிருந்தார். இந்த இருவருமே நோயின் தீவிரம் புரியாமல் பேசியிருப்பதுஇப்போது தெளிவாகியுள்ளது.
ஏழுமலை குறித்து சி.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் குரியன் தாமஸ்செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 24ம் தேதி ஏழுமலை இங்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை கொடுக்கத் தொடங்கியபிறகு அவரது ரத்தம், சளி போன்றவை புனே வைரஸ் ஆராய்ச்சி நிலையத்துக்கு பரிசோதனைக்காகஅனுப்பப்பட்டது.
தற்போது, ஏழுமலையைத் தாக்கியுள்ளது கரோனா வைரஸ்தான் (சார்ஸ் நோய்க்கான வைரஸின்பெயர்) என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏழுமலை தற்போது முற்றிலும் குணமடைந்துள்ளார். அவர் இங்கு சேர்க்கப்பட்டநாளிலிருந்து பல்வேறு நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்ததால், காய்ச்சலிலிருந்துஅவர் முற்றிலும் குணமடைந்து விட்டார்.
பரிசோதனைக்காக ரத்தம் எடுத்தபோதுதான் அவருக்கு சார்ஸ் இருந்திருக்கிறது. தற்போது அவருக்குசார்ஸ் நோய் இல்லை. முற்றிலும் குணமடைந்து விட்டார்.
உலக சுகாதார நிறுவன அறிவுரைப்படி, ஒரு சார்ஸ் நோயாளி தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும்மேலாக எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தால் அவர் குணமடைந்து விட்டதாகக் கருதிவீட்டுக்கு அனுப்பி விடலாம்.
சுகாரத நிலையத்தில் ஏழுமலை:
எனவே, ஏழுமலையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பெண்ணாத்தூரில் உள்ளஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் 10 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார் என்றார் டாக்டர்குரியன்.
இதற்கிடையே காய்ச்சால் பாதிக்கப்பட்ட ஏழுமலையின் அண்ணன் சந்திரன் மற்றும்சொந்தக்காரர்கள் 19 பேர் தனிமையில் வைக்கப்படுத்தப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்டகலெக்டர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு சார்ஸ் நோய் தாக்கியுள்ளதா என்பது குறித்துடாக்டர்கள் சோதித்து வருகின்றனர்.
இவர்களின் ரத்த சாம்பிள்களும் புனேவுக்கு அனுப்பப்பட உள்ளன. மேலும் திருவண்ணாமலைமாவட்ட அரசு மருத்துவமனையில் சிறப்பு சார்ஸ் வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications