காய்ச்சலில் சிக்கிய கிராமம்: சார்ஸ் பரவியதாக வதந்தி
கலவை:
வேலூர் மாவட்டத்தில் உள்ள கலவையையடுத்து ஒரு கிராமத்தில் 43 பேருக்கு கடுமையான விஷக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கப்பூரில் பணிபுரியும் ஏழுமலைக்கு சார்ஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு வேலூர்சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டது. இதனால் வேலூர் மாவட்டம் முழுவதுமே சார்ஸ் நோய் பயம் பரவிக் கிடக்கிறது.
இந் நிலையில் வேலூர் கலவை பகுதியை அடுத்த அள்ளாளச் சேரி கிராமத்தில் கடும் காய்ச்சல் பரவியுள்ளது. கடந்த இரு நாட்களாக இந்தஊரில் இந்த நோய் பரவி வருகிறது. இதுவரை 43 பேரைத் தாக்கியுள்ளது.
நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடும் காய்ச்சலும், உடல் நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. ஊரையே ஒட்டுமொத்தமாக நோய் தாக்கியதைஅறிந்த வேலூர் மாவட்ட நிர்வாகம் அங்கும் மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது.
அவர்கள் வீடு வீடாக பரிசோதனை நடத்தினர். இதில் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த 9 பேரை உடனே மருத்துவமனையில்அனுமதித்தனர். இதில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த ஊரில் சார்ஸ் பரவிவிட்டதாக பெரும் வதந்தி கிளம்பியது. ஆனால், இவர்களுக்கு சாதாரண காய்ச்சல் தான் ஏற்பட்டுள்ளதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊரின் குடிநீர்த் தொட்டியில் ஏற்பட்ட அசுத்தத்தால் நோய் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அந்தத் தொட்டியைஅதிகாரிகள் சுத்தம் செய்ய உத்தரவிட்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications