நகை கடை அதிபரிடம் ரூ. 1.25 கோடி கொள்ளை: 2 சகோதரிகள் கைது- சகோதரன் தலைமறைவு
சென்னை:
திருச்சியைச் சேர்ந்த நகைக் கடை அதிபரிடம் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டசம்பவத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் நகைக் கடை வைத்திருப்பவர் சுபாஷ் சந்த் ஜெயின். இவர் சென்னை வந்து நகைகள் வாங்கிச் சென்றுவிற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த அவர் ரூ.1.25 கோடிக்கு நகைகளைவாங்கினார்.
சென்னை வரும்போது அங்கு நகைக் கடை வைத்திருக்கும் தனது நண்பரின் காரை அவர் பயன்படுத்துவார்.நண்பரின் கார் டிரைவர் சீதாராமன் தான் ஜெயினுக்காக காரை ஓட்டிச் செல்வார்.
அதே போல இந்த முறையும் சீதாராமன் காரை ஓட்ட பல கடைகளுக்குச் சென்று ஜெயின் நகைகளை வாங்கினார்.பின்னர், திருச்சி திரும்புவதற்காக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
வேளச்சேரி அருகே சென்றபோது காரை டிரைவர் சீதாராமன் நிறுத்தினர். உடனே காரைச் சுற்றி சிலர் சூழ்ந்தனர்.
அவர்களுடன் சேர்ந்து ஜெயினை சீதாராமன் தாக்கினார். பின்னர் ஜெயினை கீழே தள்ளி விட்டு விட்டுநகைகளுடன் சீதாராமனும் பிறரும் தப்பிச் சென்றார்.
இந்த கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.முதலில் தேசிய நெடுஞ்சாலையில் அநாதையாக விடப்பட்ட கார் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து சீதாராமனின் சொந்த ஊரான திருப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளில் போலீஸார்விசாரணை நடத்தினர். சோதனையும் நடத்தினர்.
அப்போது சீதாராமனின் சகோதரிகளான பானுமதி மற்றும் மீனா ஆகியோரின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டநகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவற்றை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து இரு சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதாராமனும் மற்றும் அவனது கூட்டாளிகளும் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர். அவர்களைத் தேடும் பணிதொடர்கிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications