சாலையோர குடிசை வீட்டுக்குள் லாரி புகுந்தது: பெண், குழந்தை பலி
திருச்சி:
திருச்சி அருகே தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரத்தில் இருந்த குடிசை வீட்டுக்குள் புகுந்ததில்அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் அவருடைய குழந்தையும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருச்செங்கோட்டிலிருந்து கறிக் கோழிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி திருச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த கொடியம்பாளையும் கிராமம் அருகே நேற்று இரவுசென்று கொண்டிருந்தபோது லாரியின் டிரைவர் திடீரென்று தன் கட்டுப்பாட்டை இழந்தார்.இதையடுத்து தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரத்தில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் மோதிகவிழ்ந்தது.
இவ்விபத்தில் அந்த வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணும் அவருடைய குழந்தையும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அந்தப் பெண்ணின் கணவரும் மற்றொரு உறவினரும் பலத்த காயம் அடைந்தனர்.அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாரி மீது பஸ் மோதி 2 பேர் பலி:
இதற்கிடையே ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது அரசு பஸ் ஒன்றுபின்பக்கமாக வந்து மோதியதில் 2 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள ஒரு சோதனைச் சாவடி அருகே ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.அப்போது ராமநாதபுரத்திலிருந்து சென்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ் எதிர்பாராத விதமாக அந்தலாரியின் மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் இடது பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது.
இதனால் பஸ்சில் சென்று கொண்டிருந்த 2 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்தவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரு விபத்துகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications