மே 8ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.
பெங்களூர்:
ஜிசாட்-2 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் வரும் 8ம் தேதிவிண்ணில் பறக்க உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்துஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் ஏவப்பட உள்ளது.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்துவிட்டால் இனி தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்களை இந்தியாவே விண்ணில் செலுத்தும் நிலை ஏற்பட்டுவிடும். பிரான்சின் ஏரியன் ராக்கெட்அல்லது அமெரிக்க ராக்கெட்டுகளை எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஒரு செயற்கைக் கோள் தொலைத் தொடர்புக்கு (டி.வி. ரேடியோ, தொலைபேசி போன்றவற்றின்செயல்பாட்டுக்கு) பயன்பட வேண்டுமென்றால் அதை பூமியில் இருந்து 36,000 கி.மீ. உயரத்தில்செலுத்தியாக வேண்டும். இத்தனை சக்தி மிக்க ராக்கெட்டை திட எரிபொருளைக் கொண்டு ஏவமுடியாது. திரவ எரிபொருளாலும் ஏவ முடியாது.
இதனால் இத்தனை காலம் இந்தியா தடுமாறி வந்தது. இந்தியாவின் எஸ்.எல்.வி. வகைராக்கெட்டுகள் திட எரிபொருளால் இயங்குவவை. ஏ.எஸ்.எல்.வி. மற்றும் பி.எஸ்.எல்.வி.ஆகியவை திட மற்றும் திரவ எரிபொருளால் பறப்பவை.
ஜி.எஸ்.எல்.வியை ஏவ திரவ நிலையில் இருக்கும் ஹைட்ரஜன், ஆக்ஜிசன் வாயு எரிபொருள்தேவைப்பட்டது. இந்த எரிபொருளைக் கொண்டு இயங்க கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின்கள்தேவைப்பட்டன.
இந்த கிரையோஜெனிக் என்ஜின்களை இந்தியாவுக்குத் தர ரஷ்யா முன் வந்தது. ஆனால், அதைஅமெரிக்கா தடுத்துவிட்டது. இதையடுத்து இந்தியாவே கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பில்ஈடுபட்டுள்ளது.
இந் நிலையில் இந்தியாவுக்கு 7 கிரையோஜெனிக் என்ஜின்களை அமெரிக்காவையும் மீறி ரஷ்யாவழங்க முன் வந்தது. இதில் 3 என்ஜின்கள் இந்தியா வந்து சேர்ந்துவிட்டன. இதில் ஒரு என்ஜினைக்கொண்டு 2001ம் ஆண்டில் முதலில் ஒரு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை இந்தியா விண்ணில்வெற்றிகரமாக செலுத்தி சோதனையிட்டது.
இப்போது இரண்டாவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. மே9ம் தேதின் இந்த ராக்கெட்டைச் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு ஒருநாள்முன்பாகவே ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான "இஸ்ரோ"முடிவு செய்துள்ளது.
மே 8ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஜிசாட்-2 செயற்கைக்கோளை சுமந்து கொண்டுஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் விண்ணில் பாயும் என "இஸ்ரோ" அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் கிரையோஜெனிக் என்ஜின் வரும் 2005ம் ஆண்டுக்குள்தயாராகிவிடும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications