சபாநாயகர் காளிமுத்துவும்.. சபாநாயகி ஜெயலலிதாவும்: இளங்கோவன் வர்ணனை
சென்னை:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குட்டிச் சுவராகிவிட்டதாகவும் இதனால் அதிமுக ஆட்சியை உடனேகலைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், ஜெயலலிதாவுடன் மறைமுகமான அரசியல் உறவு வைத்துள்ள பா.ஜ.க. இந்த அரசைக்கலைக்க முன் வருமா என்பது சந்தேகம்தான் என்றார்.
சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைந்து கொண்டே வருகிறது. தினமும் கொலை,கொள்ளைச் சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளன.
யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்வது, பத்திரிக்கையாளர்களைமிரட்டுவது, நியாயத்தைச் சொன்னால் சிறையில் தள்ளுவது என்று இங்கு ஜனநாயகத்துக்கு இடமேஇல்லாமல் போய்விட்டது.
சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதாவைப் பாராட்டினால் மட்டுமே பத்திரிக்கைநடத்த முடியும் என்ற நிலையை உருவாக்கப் பார்க்கிறார்கள். நியாயமாக செயல்படும்பத்திரிக்கைகள் மீது சபாநாயகர் காளிமுத்துவும் சபாநாயகி ஜெயலலிதாவும் உரிமை மீறல்பிரச்சனை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளைக்கார ஆட்சியில் கூட இப்படி நடந்தது இல்லை. நக்கீரன் கோபாலை போலீஸை விட்டுசித்திரவதை செய்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
மாநிலத்தில் விவசாயியில் ஆரம்பித்து யாரும் மகிழ்ச்சியாக இல்லை. எல்லாமே குட்டிச்சுவராகிவிட்டது. மக்கள் நலனுக்காக எதையுமே செய்யாத இந்த ஜெயலலிதா குடிமகன், குடிமகள்பெயர் சூட்டியும், தாய் பெயரை இனிஷியலாகப் போடலாம் என்று சொல்லியும் சட்டம் கொண்டுவந்ததை பெரிய சாதனை மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த அரசைக் கலைப்பதற்குத் தேவையான அனைத்து காரணங்களும், நியாயங்களும் உள்ளன.ஆனால் அதை மத்தியில் ஆளும் பா.ஜ.க. செய்யுமா என்பது சந்தேகம் தான். இந்த இருகட்சிகளுக்கும் இடையே கள்ள உறவு நிலவி வருகிறது.
தமிழ் நாட்டுக்கு புதிய தொழிற்சாலை ஏதாவது வந்ததா? வேலை வாய்ப்பு பெருகியதா..இல்லையே.
காவிரி விஷயத்தில் பேச்சு நடத்த தயார் என்று கர்நாடக முதல்வர் கூறியுள்ளது நல்ல விஷயம்.ஆனால், இதில் ஜெயலலிதா என்ன செய்வார் என்று யாரும் கூற சொல்ல முடியாது.
கடல் நீரை குடிநீராக்க ரூ. 1,500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். நல்லது தான். ஆனால், புதியவீராணம் திட்டம் மாதிரி கமிஷன் அடிக்க உருவாக்கிய திட்டம் மாதிரி இதையும் அமலாக்கக்கூடாது.
பொடா சட்டத்தை வாபஸ் பெற பா.ஜ.க. மறுக்கிறது. திமுக, மதிமுக, பா.ம.கவின் கோரிக்கையைகாதில் வாங்க மாட்டார் அத்வானி. இதனால் இந்தக் கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும்.
ஜெயலலிதா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. டான்சி வழக்கில் விரைவில் தீர்ப்புவெளியாகவுள்ளது. அதன்பின் ஜெயலலிதா ஆட்சியில் நீடிக்க முடிாது. 6 மாதத்தில் தமிழகத்தில்சட்டசபைக்கு இடைத் தேர்தல் வரலாம்.
அப்பேது அதிமுகவில் பன்னீர்செல்வம் கோஷ்டி, தம்பிதுரை கோஷ்டி, பொன்னையன் கோஷ்டி எனபல கோஷ்டிகள் உருவாகும் என்றார் இளங்கோவன்.
-->












Click it and Unblock the Notifications