காய்ச்சலுக்கு 2 பேர் சாவு: திருச்சியில் சார்ஸ் பீதி
திருச்சி:
திருச்சி அருகே 2 பேர் காய்ச்சலால் மரணமடைந்ததால், அங்கு சார்ஸ் நோய் பரவி விட்டதாகபொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
ஆனால் மலேரியா காய்ச்சலால்தான் அவர்கள் இறந்துள்ளதாகவும் சார்ஸ் நோயால் சாகவில்லைஎன்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி, கள்ளிக்காட்டுப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய கிராமங்களைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், சென்னையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சொந்தஊரில் திருவிழா நடப்பதையொட்டி அனைவரும் தங்களது கிராமங்களுக்கு வந்திருந்தனர்.
கள்ளிக்காட்டுப்பட்டி கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த பலருக்குதிடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதில் வெள்ளையன், மல்லிகா ஆகியோரது நிலைமை மிகவும்மோசமடைந்தது.
இதையடுத்து இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைபலனளிக்காமல் வெள்ளையன் இறந்தார். இதையடுத்து மல்லிகா திருச்சி அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இவர்களைத் தவிர மேலும் நூற்றுக்கும் அதிகமான மக்களுக்கு கடுமையான காய்ச்சல்ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சார்ஸ் நோய் பரவி விட்டதாக பீதி கிளம்பியது.இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு மருத்துவர் குழு விரைந்தது.
கிராமத்தில் இருந்த அனைவருக்கும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. காய்ச்சலால்இறந்தவர்களுக்கு சார்ஸ் இல்லை என்றும், சாதாரண மலேரியா காய்ச்சல் காரணமாகவேஅவர்கள் இறந்திருக்கிறார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும்அப்பகுதியில் சார்ஸ் பீதி குறையவில்லை.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications