வாஜ்பாய் சென்னை வருகை: விழா இடம் திடீர் மாற்றம்- பந்தல் பிரிப்பு
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் வரும் 4ம் தேதி ஒரு நாள் பயணமாக சென்னைக்கு வருகிறார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இந்திரா காந்தி சர்வதேச விமான தளம் ரூ.81 கோடிசெலவில் விரிவாக்கப்பட்டுள்ளது. இதைத் திறந்து வைக்க வாஜ்பாய் சென்னை வருகிறார்.
ஆளுநர் ராம்மோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதாவுடன் அவர் பங்கேற்கும் இந்த விழா முதலில்மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தஇடத்தை பிரதமரின் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பலமுறை வந்து பார்வையிட்டுச் சென்றனர்.
விழா மாலை 6 மணிக்குத் தொடங்குவதால் அதிகமான வெளிச்சமும், உடனடியாக வெளியேறும்பாதைகளும் இருக்குமாறு பந்தல் அமைக்குமாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
அவர்களது யோசனைப்படி பந்தலும் போடப்பட்டது. இதற்காக இதுவரை ரூ. 10 லட்சம்செலவிடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலில் குண்டு துளைக்காத மேடையும் அமைக்கப்பட்டு வந்தது.இதை மத்திய உளவுப் பிரிவினர் நேரடியாகக் கண்காணித்து வந்தனர்.
இந்த மேடை போடப்பட்ட இடம் பாதுகாப்பு ரீதியில் அவர்களுக்கு திருப்தி தரவில்லை என்றுதெரிகிறது. இதையடுத்து இன்று காலை பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள்சென்னை வந்தனர்.
டி.ஐ.ஜி. ராஜேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு எஸ்.பி. சங்கர், விமான பாதுகாப்புப் படைஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர்கள் விழா நடக்கும் இடத்தை மாற்ற உத்தரவிட்டனர்.
இப்போது விரிவாக்கப்பட்ட விமான நிலையத்துக்குள்ளேயே இந்த விழாவை நடத்திவிட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளேயே பந்தல் போடப்பட்டு வருகிறது. கார் பார்க்கிங்பகுதியில் போடப்பட்ட விழா பந்தலும் குண்டு துளைக்காத மேடையும் பிரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான தள விரிவாக்க நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர்ஷானவாஸ் ஹூசேன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.
விழா முடிந்த பின்னர் அன்று இரவே பிரதமர் டெல்லி திரும்புகிறார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications