இந்தியா- பாக். அமைதி முயற்சி: அமெரிக்கா மகிழ்ச்சி
வாஷிங்டன்:
இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் தூதர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும்பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
இந்திய நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதால் கடந்த 16 மாதங்ளுக்கு முன் இந்தியத் தூதரைபிரதமர் வாஜ்பாய் திரும்ப அழைத்தார். அதே போல பாகிஸ்தானும் தூதரை திரும்பப் பெற்றது.
மேலும் எல்லையில் படைகளைக் குவித்தது இந்தியா. பதிலுக்கு பாகிஸ்தானும் படையைக் குவிக்க எந்த நேரமும்போர் மூளும் சூழல் உருவானது. இதையடுத்து அமெரிக்கா தலையிட்டது. தீவிரவாதிகளைத் தடுக்க நடவடிக்கைஎடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியது.
பாகிஸ்தானும் தீவிரவாதிகளை ஒடுக்க ஒப்புக் கொண்டதையடுத்து இந்தியா தனது படையை எல்லையில் இருந்துவாபஸ் பெற்றது.
இந் நிலையில் சமீபத்தில் காஷ்மீர் சென்ற வாஜ்பாய், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தத் தயார் என்று அறிவித்தார்.இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் மிர் ஜமாலி தொலைபேசியில் வாஜ்பாயுடன் பேசினார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் பாகிஸ்தானுக்கு தூதரை நியமிக்கவும், விமான போக்குவரத்தைத் தொடங்கவும்வாஜ்பாய் முன் வந்தார். இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இதையடுத்து பாகிஸ்தானும் இந்தியாவுக்குதூதரை நியமிப்பதாக அறிவித்துள்ளது. விமான சேவையைத் தொடங்கவும் முன் வந்துள்ளது.
இரு நாடுகளின் இந்த புதிய அணுகுமுறைக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் பெரும் மகிழ்ச்சியைத்தெரிவித்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறுகையில், முதலில் இரு நாட்டுத்தலைவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.வாஜ்பாயின் இந்த நிச்சயம் பெரும் பலனளிக்கும் என்றார்.
இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்டாரா கூறுகையில், இந்தியப் பிரதமர் மிக நேர்மையானநடவடிக்கையை எடுத்துள்ளார் என்றார்.
வாஜ்பாயின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் மாநாட்டுஅமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் பொருளாதார, வர்த்தக விவகாரங்கள் குறித்துப் பேசத் தயாராக இருப்பதாக பாகிஸ்தானியவெளியுறவுத்துறை அமைச்சர் கசூரி தெரிவித்துள்ளார்.
ஆனால், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறுகையில் இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் தயார்.அதில் முக்கிய பிரச்சனை காஷ்மீர் தான். எனவே, அது குறித்துத் தான் முக்கியமாக பேசப்பட வேண்டும். மற்றபிரச்சனைகளை அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்றார்.
பாகிஸ்தானிய பிரதமர் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டினாலும் அந் நாட்டு ராணுவமும், ராணுவத் தலைவரானமுஷாரபும் இந்தியாவுடன் நட்புறவுக்கு தயாராக இல்லை. இந்தியாவுடன் மோதல் தொடரும் வரை தான்பாகிஸ்தானை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பது தான் இதற்குக் காரணம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications