நிர்வாகிகள் அதிரடி மாற்றம்: ஒடுக்கப்படுகிறார் இளங்கோவன்
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை அதிரடியாய் மாற்றியுள்ளார் சோனியா காந்தி.
இதுவரை அவரது அரசியல் செயலாளராக இருந்து அம்பிகா சோனியிடம் இருந்து அந்தப் பதவியைபறித்துள்ளார். அதே போல மாநிலப் பார்வையாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை ஒதுக்கப்பட்டே வைக்கப்பட்டிருந்த பல தலைவர்களுக்கு மீண்டும் பொதுச் செயலாளர் பதவிகள்தரப்பட்டுள்ளன. இதில் முக்கியமானவர் ஆர்.கே. தவான். இவர் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி காலத்தில் கட்சியில்கொடி கட்டிப் பறந்தவர்.
மீண்டும் அரசியல் விவகாரக் குழு:
சோனியா இவரை அடக்கி வைத்திருந்தார். இப்போது மீண்டும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அதே போலமீண்டும் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவையும் ஏற்படுத்தியுள்ளார் சோனியா. இந்திரா காந்தி காலத்தில்இந்தக் குழு தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை விடவும் அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது.
ராஜிவ் இந்தக் குழுவை செயலிழக்க வைத்தார். இப்போது இந்தக் குழு மீண்டும் தோன்றியுள்ளது. இதில் பிரணாப்முகர்ஜி, அர்ஜூன் சிங், பட்டா சிங், குலாம் நபி ஆசாத் போன்ற பெருந்தலைகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தலுக்க்காக..
மத்தியப் பிரதேதம், ராஜஸ்தான், டெல்லி உள்பட முக்கியமான வட மாநிலங்களில் தேர்தல் வருவதையொட்டிகட்சியின் நிர்வாகிகளை சோனியா மாற்றி அமைத்துள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் நடந்த கேரத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பிக்களைத் தேர்வு செய்ய நடந்த தேர்தலில் சோனியாஅறிவித்த வேட்பாளருக்கு எதிராக கேரள ஜாம்பவான் கருணாகரன் தனது ஆட்களை நிறுத்தினார். இதில்கருணாகரனை சரியாகக் கையாள அம்பிகா சோனி தவறிவிட்டதாக சோனியா நினைக்கிறார்.
இதனால்தான் அவரைத் கேரள பொறுப்பாளர் பதவியில் இருந்தும் தனது அரசியல் செயலாளர் பதவியில்இருந்தும் சோனியா நீக்கியுள்ளார்.
ஜெயந்தி, மணி சங்கர் அய்யர்:
தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜனுக்கு மீண்டும் கட்சியில் பதவி தரப்பட்டுள்ளது. இவர் கட்சியின்ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவில் நிர்வாகியாக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் செயல் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக மணிசங்கர அய்யரும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பொறுப்பாளர் கமல்நாத்:
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளராக இதுவரை இருந்து வந்த ரமேஷ் சென்னிதாலாவும்சோனியா மாற்றியுள்ளார்.
அவருக்குப் பதிலாக புதிய பார்வையாளராக முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.இதன்மூலம் இளங்கோவன் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இளங்கோவனுக்கு ரமேஷ் சென்னிதலாவின் முழு ஆதரவு இருந்தது. இதனால் தான் தலைவர் பதவியைசோ.பாலகிருஷ்ணனிடம் இழந்தாலும் கூட செயல் தலைவர் என்ற பதவியைப் பெற்றார் இளங்கோவன்.
ஆனால், ரமேஷ் சென்னிதாலா மாற்றப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சியின் சோ.பா- வாசன் அணியினருக்குபெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜி.கே.வாசனும், சோ.பாலகிருஷ்ணணும் சோனியாவிடம் போட்டுக்கொடுத்து தான் ரமேஷ் சென்னிதலாவை மாற்றியுளளதாக இளங்கோவன் அணி கருதுகிறது.
இப்போது தமிழக பொறுப்பாளராகியுள்ள கமல்நாத் தீவிரமான சோனியா ஆதரவாளர். மூப்பனார் மீது அதிகமானமரியாதை வைத்திருப்பவர். இதனால் ஜி.கே. வாசன் அணியின் கை தான் இனி தமிழக காங்கிரசில் ஓங்கும்.
சமீபகாலமாக தனது அதிரடி பேட்டிகள், போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் உயிர்தரும் வேலைகளில் இளங்கோவன் ஈடுபட்டிருந்தார்.
இனி அவர் அடக்கப்பட்டுவிடுவார் என்றே கருதப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications