ஜாக்கிரதை: நாளை முதல் "அக்னி நட்சததிரம்"
சென்னை:
நாளை முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. இதனால் அடுத்த ஒரு மாதத்துக்குவெயில் மண்டையைப் பிளக்கும்.
கோடை காலத்தின் உச்ச கட்டமாக கருதப்படும் கத்திரி வெயில் நாளைமுதல் தொடங்குகிறது. ஜூன் 1ம் தேதிவரை இந்த வெயில் நீடிக்கும். இந்த கால கட்டத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அனல் காற்றுக்குப் பஞ்சம்இருக்காது. அனல் தகிக்கும். சும்மா இருந்தாலே வியர்க்கும்.
அக்னி நட்சத்திரத்தின்போது தமிழகத்தில் 113 டிரிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. இது நடந்தது கடந்த 1910ம்ஆண்டில். அதற்குப் பிறகு கடந்த 1980ம் ஆண்டு 112 டிகிரி வெயில் நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில்பதிவானது.
ஆனால், இந்த முறை கத்திரி வெயில் அந்தளவுக்கு கொடுமையாக இருக்காது என்று மக்கள் நம்புகிறார்கள்.காரணம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை நன்றாக பெய்துவருகிறது. இதனால் வெயிலும் கொஞ்சம் குறைந்துள்ளது.
ஆனால், சென்னையில் மட்டும் மழையில்லை. வெயிலுக்குப் பஞ்சமும் இல்லை.
கத்திரி வெயிலின்போது அதிகம் வெளியே நடமாடாதீர்கள். போனாலும் தலையில் ஒரு தொப்பியோ துண்டோபோட்டுச் செல்லுங்கள். பெண்கள் சேலை அல்லது துப்பட்டாவை தலையில் போட்டுக் கொண்டு செல்வது நல்லது.
பகல் 11 முதல் 3 மணி வரை தேவைப்பட்டால் தவிர வெளியே நெடுந்தூரம் வெயிலில் திரியாதீர்கள்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications