ஜி.வி. உடல் தகனம் செய்யப்பட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் தற்கொலை செய்து கொண்ட பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

பிரபல இயக்குநர் மணி ரத்தினத்தின் மூத்த சகோதரரான ஜி.வி. நேற்று சென்னை சேத்துப்பட்டில்உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கடன் சுமை காரணமாக அவர் தற்கொலைசெய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவருடைய மனைவி சுஜாதா கொடைக்கானல் சென்றிருந்தார். அவர் இன்று காலை சென்னைதிரும்பினார். வெளிநாடுகளில் உள்ள மகன் மற்றும் மகளும் கூட சென்னை திரும்பி விட்டனர்.

இதையடுத்து ஜி.வியின் இறுதி ஊர்வலம் இன்று பகலில் நடைபெற்றது. ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவருடைய உடல் பெசன்ட் நகர் இடுகாட்டு மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.ஜி.வியின் மகன் ஜெயச்சந்திரன் அவருடைய உடலுக்குத் தீ மூட்டினார்.

ஜி.விக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளிதரன்தெரிவித்துள்ளார்.

மேலும் திரையுலகினர் சார்பில் நாளை சென்னை தேவி தியேட்டரில் ஜி.விக்கு இரங்கல் கூட்டம்நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+