தீவிரமடைகிறது மருத்துவ மாணவர்கள் போராட்டம்
சென்னை:
தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தங்கள்போராட்டத்தை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
எந்த அரசியல் கட்சியோ, தனி நபரோ எங்களைப் போராட்டம் நடத்துமாறு தூண்டவில்லை.உணர்வுபூர்வமான முறையில் நாங்கள் போராடி வருகிறோம். இதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இதுவரை 7 முறை அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியும்அவற்றால் பலன் ஏதும் கிடைக்கவில்லை.
அடுத்த கட்டப் போராட்டம் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றனர் மாணவர்கள்.
இதற்கிடையே பட்ட மேற்படிப்பு பயிலும் பயிற்சி மருத்துவர்களும் நாளை முதல் முழு நேரப்போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.
இந்நிலையில் சென்னை, மதுரை, திருச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்றும்போராட்டம் நடத்தினர். அவர்களுடைய போராட்டம் இன்று 12வது நாளை எட்டியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
மே 1ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும்என்று கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதையும் மீறி அவர்கள் தங்கள்போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications