சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்: மருத்துவ மாணவர்கள் முடிவு
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் 13வது நாளை எட்டியுள்ள நிலையில் சாகும் வரைஉண்ணாவிரதப் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த மாதம் 23ம்தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இடையில் கடந்த 3ம் தேதி தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத்தொடர்ந்து அவர்களுடைய போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களும் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையிலும் நோயாளிகள் நீண்ட வரிசைகளில் சிகிச்சை பெறுவதற்காகக் காத்துக்கொண்டுள்ளனர்.
இவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஒருசில மருத்துவர்கள் மட்டுமே இருப்பதால் உரிய நேரத்தில்சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே இன்று மதியம் முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிவித்துள்ளனர்.
மொட்டை, நாமம், முக்காடு...
இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் தலைகளில் முக்காடைப்போட்டுக் கொண்டு நூதனப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டும்,நெற்றியில் பட்டை நாமம் தீட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளோ தங்கள்முகங்களில் கரியைப் பூசிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
இதேபோல் திருச்சி மற்றும் கோயம்புத்தூரிலும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications