ஜி.வியை மிரட்டிய கந்து வட்டி ரெளடி மன்னார்குடி கும்பலிடம் தஞ்சம்
சென்னை:
பட அதிபருக்கு கந்து வட்டிக்குப் பணம் தந்துவிட்டு அதைக் கேட்டு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து அவரதுதற்கொலைக்குக் காரணமாக இருந்த மதுரையைச் சேர்ந்த அந்த புள்ளி இப்போது சென்னையில்தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
அவருக்கு போயஸ் தோட்டத்துக்கு நெருக்கமான பெண் வி.வி.ஐ.பி. அடைக்கலம் தந்துள்ளார்.
மதுரை செல்லூரைச் சேர்ந்த இந்த கந்து வட்டி ஆசாமி முதலில் சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளுக்கு மீட்டர்வட்டி கொடுக்கும் தொழிலைத் தொடங்கினார். அதாவது, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிஸ் இருந்து மதுரைமார்க்கெட்டுக்கு அதிகாலையில் லாரிகளில் வந்து இறங்கும் காய்கறிகளை மொத்தமாக வாங்க வியாபாரிகளுக்குசில லட்சங்களை காலையில் தருவார்.
மாலையில் மேலும் சில லட்சம் வட்டியோடு அந்தப் பணத்தைத் தர வேண்டும். இது தான் மீட்டர் வட்டி. ஒரு மணிநேரத்துக்கு இவ்வளவு என வட்டி ஏறிக் கொண்டே போகும். இவ்வாறு பல கோடிகளை ஈட்டியுள்ள இவரைப்போல பல கும்பல்கள் மதுரையில் உண்டு.
மதுரையின் கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் ஆகியோர் இந்தக்கும்பல்களிடம் கடனை வாங்கிவிட்டு படும்பாடு சொல்லி மாளாதது. 100 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு ரூ. 20 வட்டிஎன்று இந்த மக்களை உறிஞ்சி எடுத்து வருகின்றன இந்தக் கும்பல்கள்.
இவ்வாறு பெரும் பணம் வைத்துள்ள இந்தக் கும்பல்கள் வசம் தான் இப்போது மதுரையின் பெரியஹோட்டல்களும் தியேட்டர்களும் கூட சிக்கிக் கிடக்கின்றன. பாண்டியன் ஹோட்டல். இது மதுரையின்அடையாளங்களில் ஒன்று. அவசரத்துக்கு கடன் வாங்கியதால் இந்த ஹோட்டலும் கந்துவட்டி கும்பலிடம் சிக்க,அதை மதுரையின் வி.வி.ஐ.பி. ஒருவர் தக்க சமயத்தில் தலையிட்டு காப்பாற்றினார்.
இல்லாவிட்டால் இதுவும் இன்று கந்துவட்டி கும்பலிடம் சிக்கி அந்த ஹோட்டலில் விபச்சாரம் முதல் எல்லா சட்டவிரோத செயல்களும் நடந்திருக்கும். எப்படியோ இந்த ஹோட்டல் காப்பாற்றப்பட்டுவிட்டது.
ஆனால், இவர்களிடம் பணம் வாங்கிய ஒரே காரணத்துக்காக உயிரையும், வீட்டுப் பெண்களின் மானத்தையும்விட்ட குடும்பங்கள் எத்தனையோ உள்ளது. இவர்களது பின் பலமே போலீசும், ஜாதியும் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. போலீசுக்கும் இந்தக் கும்பல்களுக்கும் நல்ல அன்டர்ஸ்டான்டிங்கும் உண்டு.
பல போலீசார் தங்கள் லஞ்சப் பணத்தை வட்டிக்கு விட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மதுரையில் கந்து வட்டிக் கும்பலுக்கெல்லாம் ராஜா தான் ஜி.விக்குப் பணம் தந்த ஆசாமி. மதுரை கீரைத்துறைபகுதியில் நீச்சல் குளம், சென்ட்ரலைஸ்டு ஏ.சி. கொண்ட பெரும் பங்களாவைக் கட்டி படாடோபமாக வாழ்ந்துவருபவர் இவர்.
இவரிடம் போய் ஏன் ஜி.வி. பணம் வாங்கினார் என்று தெரியவில்லை. இப்போது தன்னை நோக்கி அனைவர்பார்வையும் திரும்பி வருவதையடுத்து மதுரையில் இருந்து இவர் காணாமால் போய்விட்டார்.
சென்னையில் மன்னார்குடியைச் சேர்ந்த மிக முக்கியமான பெண் வி.வி.ஐ.பியிடம் இவர் தஞ்சமடைந்துள்ளதாகக்கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு விசாரணையில் இருந்து இவர் தப்பிவிட மிக அதிக வாய்ப்புகள்உருவாகியுள்ளன.
- மதுரை கந்து வட்டிக் கும்பலின் மிரட்டல் காரணம்?
- நெப்போலியனிடம் உதவி கேட்ட ஜி.வி.!
- மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications