இன்ஸ்பெக்டர் ஓட்டி வந்த ஜீப் மோதி ஒருவர் பலி
சென்னை:
சென்னையில் மோட்டார் சைக்கிள் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓட்டி வந்த ஜீப் மோதியதால் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் பலியானார்.
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் தென்னரசு. நேற்று காலை காவல் நலையத்திலிருந்துஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தார் தென்னரசு. எழும்பூர், பாந்தியன் சாலை மேம்பாலத்தில் ஜீப் வந்தபோது, எதிரே மோட்டார்சைக்கிள் ஒன்று வந்தது.
படு வேகத்தில் சென்ற போலீஸ் ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இசக்கிலிங்கம் என்பவர் அந்தஇடத்திலேயே பலியானார். ஜீப்பின் ஸ்டியரிங்கில் மோதிக் கொண்டதில், தென்னரசுவுக்கும் முகத்தில்காயம் ஏற்பட்டது.
இசக்கி லிங்கம் மேற்கு அண்ணாநகரைச் சேர்ந்தவர். அவரிடம் முறையான ஓட்டுனர் உரிமம் உள்ளது. இதுகுறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications