இந்தியாவில் பாகிஸ்தான் எம்.பிக்கள் குழு
அம்ரிஸ்தர்:
பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் குழு நல்லெண்ணப் பயணமாக இந்தியா வந்துள்ளது.
அம்ரிஸ்தரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா வழியே 13 எம்.பிக்களும் இன்று பகலில் கார்கள் மூலம் இந்தியாவந்தனர். அவர்களை அம்ரிஸ்தர் நகர மேயரும் பொது மக்களும் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் அவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.
பாகிஸ்தானில் ஆர்மிடேஜ்:
இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் நேற்றிரவு பாகிஸ்தான் வந்தார். அவருடன்தெற்காசியாவுக்கான அமெரிக்க அதிபரின் ஆலோசகர் கிரிஸ்டினா ரோக்காவும் வந்துள்ளார்.
இவர்கள் இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரபிடம் பேச உள்ளனர். எல்லைத் தாண்டிச் செல்லாமல் தீவிரவாதிகளைத் தடுக்குமாறும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதபயிற்சி முகாம்களை மூடவும் அவர்கள் வலியுறுத்துவர் என்று தெரிகிறது.
இந்த நடவடிக்கைகளை எடுக்காத வரை பாகிஸ்தானிடம் பேச்சு நடத்த மாட்டோம் என பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்புஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, ஆர்மிடேஜிடம் தெரிவித்துவிட்டார்.
கலாமுடன் வாஜ்பாய் சந்திப்பு:
இதற்கிடையே இன்று காலை ஜனாதிபதி அப்துல் கலாமை பிரதமர் வாஜ்பாய் ராஷ்ட்ரபதி பவனில் சந்தித்துப் பேசினார். இருவரும்பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை குறித்து விவாதித்தாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது.
இந்திய தூதரை ஏற்கிறது பாக்.:
இதற்கிடையே பாகிஸ்தானுக்கான அடுத்த தூதராக சிவசங்கர் மேனன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவரது பெயரைபாகிஸ்தான் அதிபருக்கு இந்தியா தெரிவித்துள்ளதாகவும் அவரை தூதராக ஏற்க பாகிஸ்தானும் முடிவு செய்துவிட்டதாகக்கூறப்படுகிறது.
மேனன் இப்போது சீனாவுக்கான இந்தியத் தூதராக உள்ளார். கடந்த 17 மாதங்களாக பாகிஸ்தானில் இந்தியத் தூதர் இல்லை. இதேபோல இந்தியாவிலும் பாகிஸ்தான் தூதர் இல்லை.
இந்தியாவுக்கு தனது தூதராக அஜீஸ் அகமத் கானை பாகிஸ்தான் நியமிக்கலாம் என்று தெரிகிறது. இவர் இப்போது பாகிஸ்தான்வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications