ராமதாசை விமர்சித்தார் எம்.பி: பாமகவினர் இடையே பயங்கர அடிதடி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர் கூட்டத்தில், அக் கட்சியின் நிறுவனர்டாக்டர் ராமதாஸின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசிய எம்.பி துரையின் பேச்சைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள்தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து எம்.பி. துரை சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதன் மூலம் பா.ம.கவில் உள்ள கோஷ்டிப் பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வந்தவாசி தொகுதி பாமக நாடாளுமன்ற உறுப்பினர் துரை. இவர் சமீபகாலமாக டாக்டர் ராமதாஸ் மீது அதிருப்தியுடன் உள்ளார்.தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தநலையில், தன்னை விட ஜூனியரான,அனுபவம் இல்லாத ஏ.கே.மூர்த்திக்கு ராமதாஸ் அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்தார்.
இது தொடர்பாக ராமதாஸிடமே பலமுறை நேரடியாக வாக்குவாதம் செய்துள்ளார் துரை.
இந் நிலையில் வந்தவாசியில் பாமக தொண்டர் கூட்டம் நடந்தது. அப்போது ராமதாஸின் செயல்பாடுகளை துரை மிகக்கடுமையாக விமர்சித்தார். இதனால் ராமதாஸின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர்.
இந்தக் கூட்டம் முடிந்தவுடன் துரையின் சொந்த ஊரான சென்னாவரத்த்துக் சென்ற ராமதாஸ் ஆதரவாளர்கள், அங்கு துரையின்ஆதரவாளர்களை ரோட்டில் வைத்து தாக்கினர். பலரது வீடுகளுக்குள்ளும் நுழைந்து அடித்தனர்,
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மிக பயங்கர சண்டை மூண்டது. இதுகுறித்துத் தெரிய வந்தவுடன் துரைவந்தவாசியில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
போலீஸார் விரைந்து வந்து துரையை சமாதானப்படுத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்தனர். அதன் பிறகே தனது போராட்டத்தைக் கைவிட்டார் துரை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications